மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்...கையில் துப்பாக்கியுடன் சாமானியன்
நடிகர் ராமராஜன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி சாமானியன் என்னும் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது.
எழுவதுகளில்ன் பிற்பகுதிகள் துவங்கி 90களின் இறுதிவரை கிராமத்து நாயகனாக ரசிகர்களின் நெஞ்சில் குடியிருந்தவர் ராமராஜன். இவரது உடைக்கென தனி பெயர் உண்டு. தனது பாணியை வேரூன்றவைக்கு எண்ணிய ராமராஜன் கலர் கலராக உடைய அணிந்து இன்றளவும் மீம்ஸ்களில் குடியிருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு இவர் நடித்த எங்கள் ஊர் காவல்காரன் படத்திற்கு பிறகு மக்கள் நாயகன் என்னும் பட்டம் சூட்டப்பட்டது. தொடர்ந்து கிராமம் சார்ந்த கதை களத்தில் நடித்து வந்த ராமராஜன் ரசிகர்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்றார். அதை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு அம்மன் கோயில் வாசலிலே படம் மூலம் இயக்குனராக உருவெடுத்த இவர் தொடர்ந்து நம்ம ஊரு ராசா, கோபுர தீபம், விவசாயி மகன், சீறிவரும் காளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இறுதியாக மேதை என்னும் படத்தில் தோன்றியிருந்தார். அதன் பின்னர் கடந்த பத்து வருடங்களாக சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?
தற்போது நடிகர் ராமராஜன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி சாமானியன் என்னும் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை மதியழகன் தயாரிக்கிறார். ஆர் ராகேஷ் இயக்கஉள்ளார்.
45 வது படமாக உருவாகும் இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்தான போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த போஸ்டர்களில் மாஸாக காணப்படுகிறார் ராமராஜன். இதன் மூலம் ராமராஜன் ஒருவேளை கேங்க் ஸ்டார் வேடத்தில் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி...ஸ்ரீநிதி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படம்