தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..
தற்போது நாயகி குறித்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தனுஷ் நடிப்பில் இறுதியாக திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் தனுஷ் படம் தோன்றியதால் ரசிகர்கள் திருச்சிற்றம்பலத்தை கொண்டாடி வந்தனர். நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட மூன்று நாயகிகளுடன் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளைஞனே சுற்றி நிகழும் கதைக்களத்தை கொண்ட இந்த படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், டோலிவுட்டில் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் தயாராகி வருகிறது. முந்தைய இரு படங்களும் திரைக்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் டைட்டில் டீசராக வெளியிடப்பட்டிருந்தது. அதில் முதுகில் துப்பாக்கியுடன் பைக்கில் தனுஷ் பறக்கும் காட்சிகள் இடம் பெற்றது. தற்போது படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தான தகவலும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு...மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்...கையில் துப்பாக்கியுடன் சாமானியன்
மேலும் செய்திகளுக்கு...நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?
1930 மற்றும் 40 களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. கேப்டன் மில்லர் படத்தை மாதேஸ்வரன் இயக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். கலை இயக்குனராக டி இராமலிங்கம் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிப்பது குறித்து முன்னதாகவே போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்தது.
இதை தொடர்ந்து தற்போது நாயகி குறித்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனன் நடித்துள்ளார். இது குறித்த போஸ்டரை சத்தியஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி...ஸ்ரீநிதி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படம்