MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya : முட்டாள்களுக்கு பதில் சொல்லாதீங்க... ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸால் வெடித்த சர்ச்சை

Suriya : முட்டாள்களுக்கு பதில் சொல்லாதீங்க... ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸால் வெடித்த சர்ச்சை

Suriya Advice to Fans : நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர்களுடனான சந்திப்பில் ஆன்லைன் மோதல்கள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் சொன்ன அட்வைஸ் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 26 2026, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya’s Strong Message to his Fans
Image Credit : X

Suriya’s Strong Message to his Fans

சோசியல் மீடியாவில் வரும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுடைய ஆற்றலை தேவையில்லாத விவாதங்களில் செலவிடாமல், தங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ரசிகர்களுடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் சூர்யா பேசும்போது, சோசியல் மீடியாவில் ஒருவர் தவறான அல்லது முட்டாள்தனமான கருத்தை பதிவிட்டால், அதற்கு தொடர்ந்து பதில் அளிப்பதன் மூலம் நாமும் அதே நிலைக்கு சென்று விடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிரில் இருப்பவரை மாற்ற வேண்டும், நம்முடைய கருத்தை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்வது மிகவும் கடினமான விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரவர் கருத்துடன் அவர்களை இருக்க விட வேண்டும் என்றும், நாம் நம்முடைய பாதையில் பயணிப்பதே முக்கியம் என்றும் சூர்யா கூறியுள்ளார்.

Suriya : ஸ்காட்லாந்தில் பிரம்மாண்ட கோட்டையில் நடந்த சூர்யா - ஜோதிகா திருமணம் - அதற்கு செலவானது எவ்வளவு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சூர்யா சொன்ன அட்வைஸ்
Image Credit : youtube/vijaytelevision

சூர்யா சொன்ன அட்வைஸ்

தான் கூறும் கருத்துகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக புரியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். சிலருக்கு தங்களுடைய கருத்து புரியலாம்; பலருக்கு புரியாமல் போகலாம். அதற்காக அவர்களுடன் தேவையில்லாமல் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, “உங்களுடைய ஆற்றலை அவர்களிடம் வீணாக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை முழு முயற்சியுடன் செய்யுங்கள்” என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் வேகமாக மாறி வருவதையும், ஏஐ உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டிய சூர்யா, தினமும் தங்களுக்கு பிடித்த விஷயத்தை முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றியை நோக்கி செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு அன்பை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் பேசியுள்ளார்.

34
சூர்யாவின் பேச்சால் சோசியல் மீடியாவில் பரபரப்பு
Image Credit : youtube/vijaytelevision

சூர்யாவின் பேச்சால் சோசியல் மீடியாவில் பரபரப்பு

சூர்யா தனது பேச்சில் எந்த ஒரு அரசியல் கட்சியையோ, குறிப்பிட்ட நபரையோ நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும், அவரது இந்த கருத்துகள் தமிழக வெற்றிக் கழகத்தினரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சில விஜய் ஆதரவாளர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது ரசிகர் மன்ற அமைப்பு அரசியல் கட்சியின் கட்டமைப்பாக மாறியிருப்பதாகவும், அவரை ஆதரிக்கும் கருத்துகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளிப்பட்டு வருவதாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

44
பேசுபொருளான சூர்யாவின் பேச்சு
Image Credit : x/Suriya Sivakumar

பேசுபொருளான சூர்யாவின் பேச்சு

இந்த சூழலில் சூர்யா, சோசியல் மீடியா பதிவுகளுக்கு பதில் அளிப்பது குறித்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், அவரது பேச்சில் விஜய் அல்லது தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான நேரடி குறிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் பொதுவான அறிவுரையை குறிப்பிட்ட அரசியல் தரப்புடன் இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். அவரது பேச்சு உண்மையில் யாரை குறிப்பிட்டது என்ற கேள்வியும் தற்போது சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush : பாடிகாட் ஆக மாறிய மகன்கள்... யாத்ரா, லிங்கா உடன் பழனி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த தனுஷ்...!
Recommended image2
Cinema : ‘தெகிடி’ ரமேஷ் முதல் ‘மன்மதன்’ முருகன் வரை... முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த பின் காணாமல் போன கோலிவுட் இயக்குநர்கள் ஒரு பார்வை
Recommended image3
Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
Related Stories
Recommended image1
Suriya : குஜிலிமஸ்து கன்ஃபார்ம்... தீபாவளி ரேஸில் முதல் ஆளாக குதித்த ‘சீன்’ சூர்யா - தெறிக்கவிடும் டீசர் இதோ
Recommended image2
ரூ.200 கோடி சென்னை பங்களா டூ மும்பையில் 1,700 சதுர அடி வீடு: சூர்யா - ஜோதிகா எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved