MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya : குஜிலிமஸ்து கன்ஃபார்ம்... தீபாவளி ரேஸில் முதல் ஆளாக குதித்த ‘சீன்’ சூர்யா - தெறிக்கவிடும் டீசர் இதோ

Suriya : குஜிலிமஸ்து கன்ஃபார்ம்... தீபாவளி ரேஸில் முதல் ஆளாக குதித்த ‘சீன்’ சூர்யா - தெறிக்கவிடும் டீசர் இதோ

Suriya Scene Movie Diwali Release : ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படத்தின் டைட்டில் மற்றும் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, அப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 09 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் சூர்யா
Image Credit : X

தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் சூர்யா

தமிழ் சினிமாவில் தற்போது ஹிட்மேன் ஆக வலம் வரும் ஹீரோ என்றால் அது சூர்யா தான். அவருக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கிறது. இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் முதலில் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெங்கி அட்லூரி இயக்கிய அப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Vishwanath and Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?
Image Credit : youtube

ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா?

அடுத்ததாக இந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான சூர்யா, தனது 47-வது படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். மலையாளத்தில் 'ரோமாஞ்சம்', 'ஆவேஷம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை ஜோதிகா தனது ழகரம் ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் நஸ்லனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூர்யாவை போல் நானும் இலவச கல்வி கொடுப்பேன்... அக்கட தேசத்து சூப்பர்ஸ்டாரின் அடிபொலி அறிவிப்பு

Related Articles

Related image1
'Rolex' படம் வருமா? வராதா? முதன்முறையாக ரோலெக்ஸ் படம் பற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட அப்டேட்
Related image2
ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?
34
சூர்யா 47 டைட்டில் என்ன?
Image Credit : youtube

சூர்யா 47 டைட்டில் என்ன?

அதன்படி சூர்யா 47 திரைப்படத்துக்கு சீன் என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் மாஸான டீசரும் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சூர்யா, கெத்தான போலீஸ் கேரக்டரில் காட்சியளிக்கிறார். இந்த படத்தில் சூர்யா உடன் இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜ்பிரியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஒரு பூஜையுடன் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் சில முக்கிய காட்சிகள் கேரளாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் மாஸ் என்டர்டெயினர் படம் என்பதால், சூர்யா ரசிகர்களும் தென்னிந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?

44
தீபாவளிக்கு ரிலீஸ்
Image Credit : youtube

தீபாவளிக்கு ரிலீஸ்

மலையாளத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளரான சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜித்து மாதவன் இயக்கும் முதல் தமிழ் படமும் இதுதான். ஜான் விஜய், ஆனந்த் ராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விடுமுறையில் நவம்பர் 6-ந் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் குதித்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது சீன்.

Song : சுனாமியில் இருந்து உருவான சூர்யா பட பாட்டு... வலியை வரிகளாக்கி பழனி பாரதி எழுதிய அந்த பாடல் எது?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Theatre Releases : விநாயகர் சதுர்த்தி லீவுக்கு தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? ஃபுல் லிஸ்ட் இதோ
Recommended image2
Siragadikka Aasai : ரோகிணி வீட்டுக்குள் வந்ததும் வெடித்த பூகம்பம்... மனோஜுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்!
Recommended image3
பிளாக் பாண்டி போல் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் யார்... யார்? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
'Rolex' படம் வருமா? வராதா? முதன்முறையாக ரோலெக்ஸ் படம் பற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட அப்டேட்
Recommended image2
ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved