MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Song : சுனாமியில் இருந்து உருவான சூர்யா பட பாட்டு... வலியை வரிகளாக்கி பழனி பாரதி எழுதிய அந்த பாடல் எது?

Song : சுனாமியில் இருந்து உருவான சூர்யா பட பாட்டு... வலியை வரிகளாக்கி பழனி பாரதி எழுதிய அந்த பாடல் எது?

Suriya Movie Song Secret : சுனாமி வந்த போது, சூர்யா படத்திற்காக பாடல் எழுதிய பழனி பாரதி, அந்த பெருந்துயரிலும் தன் மனதில் இருந்த வலிகளை வரிகளாக்கி ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அந்த பாடல் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2026, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maayavi Movie Song Secret
Image Credit : X

Maayavi Movie Song Secret

2004ம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதி அதிகாலையில் மாயாவி படத்திற்காக ஒரு பாடல் எழுத தொடங்கி இருக்கிறார் பாடலாசிரியர் பழனி பாரதி. பாடலின் பல்லவியை அன்று காலை 8:45 மணிக்கு எழுதி முடித்ததுமே, அவர் வீட்டில் ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பழனி பாரதி, பாடல் எழுதுவதை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்த டிவியை ஆன் பண்ணி பார்த்தபோது, அதில் பிரேக்கிங் நியூஸ் ஆக சென்னையில் சுனாமி வந்து பல உயிர்களை அள்ளிச்சென்ற கோரக்காட்சியை பார்த்திருக்கிறார். இதைப்பார்த்ததுமே அவருக்கு பாடல் எழுதும் மூடே போய்விட்டதாம்.

SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சுனாமி நாளில் உருவான பாடல்
Image Credit : X

சுனாமி நாளில் உருவான பாடல்

இதையடுத்து மாயாவி படத்தின் தயாரிப்பாளர் பாலாவுக்கு போன் பண்ணி, பாடலை இன்னொரு நாள் எழுதிக் கொடுக்கட்டுமா என பழனி பாரதி கேட்க, அதற்கு பாலா, படத்தின் ஷூட்டிங் நாளைக்கு இருக்கு, அதனால பாடல் இன்றே வேண்டும் என சொல்லி இருக்கிறார். படத்தில் வரும் அந்த பாட்டின் சிச்சுவேஷனோடு சேர்த்து, அந்த கோர நாளுக்கு தேவையான அன்பையும், ஆறுதலையும் குளைத்து, தன் மனதில் இருந்த வலிகளை வரிகளாக எழுதி கொடுத்திருக்கிறார் பழனி பாரதி. அதுதான் மாயாவி படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’ என்கிற பாட்டு.

ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?

34
வலிகளை வரிகளாக்கிய பழனி பாரதி
Image Credit : X

வலிகளை வரிகளாக்கிய பழனி பாரதி

சுனாமி வந்த நாளன்று தன்னுடைய மனதில் இருந்த வலிகளை கொட்டி எழுதிய அந்த பாடல் வரிகள், மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள எந்த வலிக்கும் இன்றளவும் ஆறுதல் தரும் பாடலாக உள்ளது. உங்கள் மனது எப்போதெல்லாம் பாரமாக இருக்கிறதோ... அப்போதெல்லாம் இந்த பாடலை கேட்டுப் பாருங்கள், இந்தப் பாடலில் உள்ள வரிகள் உங்களுக்கு அவ்வளவு அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கும். இப்பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இப்பாடல் இன்றளவும் ஒரு வலி நிவாரணியாக இருந்து வருகிறது.

Ilaiyaraaja : ஒரே பாட்டில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய இளையராஜா... தேசிய விருது வென்ற அந்த பாடல் பற்றி தெரியுமா?

44
மாயாவி மூவி சீக்ரெட்
Image Credit : X

மாயாவி மூவி சீக்ரெட்

மாயாவி திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்தை சிங்கம்புலி தான் இயக்கி இருந்தார். இன்று பல திரைப்படங்களில் காமெடி நடிகராக ஜொலித்து வரும் சிங்கம்புலி இயக்கிய படம் தான் மாயாவி. இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மாயாவி திரைப்படத்தை இயக்குநர் பாலா தான் தயாரித்து இருந்தார். பிதாமகன் படத்திற்கு பின்னர் சூர்யா நடித்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்ப் பாடல்கள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Enna Vilai Review : கருணாஸின் என்ன விலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
Recommended image2
Theatre Releases : என்ன விலை முதல் சண்டக்காரி வரை... இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 13 படங்கள் என்னென்ன?
Recommended image3
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Related Stories
Recommended image1
AR Rahman இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு பாடிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved