Ajith : ஷங்கர் இயக்கத்தில் அஜித்? முதன்முறையாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி
Ajith Kumar - Shankar Movie : விஜய், ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கிய ஷங்கர், முதன்முறையாக நடிகர் அஜித் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

Ajith Next Movie
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், அவரின் அடுத்த படம் எப்போ ஸ்டார்ட் ஆகும் என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் கடந்த ஓராண்டாக அஜித்தின் அடுத்த படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் செம அப்செட் ஆகினர். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியானது.
அஜித் படத்தை தயாரிக்கும் ஷாலினி
அதன்படி அஜித்தின் 64வது படத்திற்கு டேர் டெவில் என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தான் தயாரிக்க உள்ளாராம். இப்படம் மூலம் ஷாலினி சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார். அஜித்தை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து விலகியே இருந்த ஷாலினி, எப்போ ரீ எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர் நடிகையாக இல்லாமல் தயாரிப்பாளராக தற்போது எண்ட்ரி கொடுத்துள்ளார்.
டேர் டெவில் அப்டேட்
அஜித் நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தை குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதில் ஸ்ரீலீலா, பிரபு ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டேர் டெவில் திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுவென முடித்து அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
அஜித் - ஷங்கர் கூட்டணி
டேர் டெவில் படத்தின் அப்டேட்டுகள் ஒரு புறம் இருக்க, நடிகர் அஜித்தின் மற்றொரு படம் பற்றிய அப்டேட் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி டேர் டெவில் படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை பான் இந்தியா படமாக உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டும் உறுதியானால், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பேக் கொடுப்பாரா ஷங்கர்?
தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷங்கர். அவர் இதுவரை கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய், ரஜினி, கமல், விக்ரம் ஆகியோரை வைத்து படம் இயக்கிய நிலையில், அஜித் உடன் மட்டும் கூட்டணி அமைக்காமல் இருந்தார். அந்த கூட்டணி தற்போது கைகூட உள்ளதால், கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் அப்படமும் இணைந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் அஜித் படம் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

