MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • DC Movie Day 3 Box Office : ‘டிசி’ ஹிட் லிஸ்ட்டில் இணைந்ததா? 3 நாட்களில் லோகேஷ் படத்தின் வசூல் எவ்வளவு?

DC Movie Day 3 Box Office : ‘டிசி’ ஹிட் லிஸ்ட்டில் இணைந்ததா? 3 நாட்களில் லோகேஷ் படத்தின் வசூல் எவ்வளவு?

DC Movie Day 3 Box Office Collection : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் டிசி திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2026, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
DC Movie Day 3 Box Office Collection
Image Credit : X

DC Movie Day 3 Box Office Collection

தமிழ் சினிமாவில் இயக்குநராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கியிருக்கும் அருண் மாதேஸ்வரன், இந்த முறை வித்தியாசமான முயற்சியாக லோகேஷ் கனகராஜை கதாநாயகனாக வைத்து ‘டிசி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களிலேயே அவரது தனித்துவமான மேக்கிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

DC புயலில் சிக்கி வசூலில் வாஷ் அவுட் ஆன GDN! படம் சூப்பர்... ஆனா வசூல் இவ்வளவு சுமாரா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
லோகேஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி
Image Credit : X

லோகேஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி

அதேபோல், லோகேஷ் கனகராஜும் இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்படிப்பட்ட இருவரும் இணைந்ததோடு, லோகேஷ் முதல் முறையாக ஹீரோவாக நடித்ததால் ‘டிசி’ அறிவிக்கப்பட்ட நாள் முதலே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. படம் வெளியான பிறகு, அருண் மாதேஸ்வரனின் வழக்கமான ராவான மேக்கிங் இதில் இடம்பெற்றிருந்தாலும், கதையின் மையமாக எடுத்துக்கொண்டிருந்த விஷயம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. பெற்றோரின் ஆதரவின்றி வளரும் குழந்தைகளின் வாழ்க்கை, கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்ட விஷயங்களைப் படத்தின் கதைக்களத்துடன் இணைத்து சொல்லியிருப்பதற்காக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ

Related Articles

Related image1
DC Movie Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய லோகேஷ்... முதல் நாளே இத்தனை கோடி வசூல் அள்ளியதா டிசி?
Related image2
DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ
34
நடிப்பில் அசத்திய லோகேஷ்
Image Credit : Asianet News

நடிப்பில் அசத்திய லோகேஷ்

இயக்குநராக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான லோகேஷ், கதாநாயகனாக எப்படி இருப்பார் என்ற கேள்வி படம் வெளியாகும் முன்பே இருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு அவரது நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, அனுபவமிக்க நடிகர்களுடன் இணைந்து நடித்த காட்சிகளிலும், லோகேஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இனிவரும் காலங்களில் லோகேஷ் நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. படத்தின் மேக்கிங், நடிப்பு, இசை என பல அம்சங்களுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

பேங்க் ஆபிஸர் டூ பான் இந்தியா டைரக்டர்... லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

44
3 நாட்களில் ரூ.20.95 கோடி வசூல்?
Image Credit : Asianet News

3 நாட்களில் ரூ.20.95 கோடி வசூல்?

இதற்கிடையே ‘டிசி’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. சாக்னில்க் வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, படத்தின் மூன்றாவது நாள் வசூல் சுமார் ரூ.9.55 கோடி என கூறப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் சுமார் ரூ.11 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில், மூன்றாவது நாள் வசூலையும் சேர்த்து படத்தின் மூன்று நாள் இந்திய வசூல் சுமார் ரூ.20.95 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களும், ரசிகர்களிடையே வரவேற்பும் கிடைத்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Lokesh Kanagaraj: முன்னணி ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்.! மாஸ் காட்டும் லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith : ஷங்கர் இயக்கத்தில் அஜித்? முதன்முறையாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி
Recommended image2
Thriller Movie: வெறும் 2 மணி நேரம் தான்.. நிமிஷத்துக்கு நிமிஷம் ட்விஸ்ட்! இந்த மலையாள த்ரில்லர் மிஸ் பண்ணாதீங்க
Recommended image3
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Related Stories
Recommended image1
DC Movie Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய லோகேஷ்... முதல் நாளே இத்தனை கோடி வசூல் அள்ளியதா டிசி?
Recommended image2
DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved