காதலிக்கும் போது ‘அஜித் - ஷாலினி’ பயன்படுத்திய கோர்டு வேர்டு என்ன தெரியுமா?
நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் காதலிக்கும் போது அவர்கள் இருவரும் பயன்படுத்திய கோர்டு வேர்டு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

What Code word used by Ajith Shalini while Dating : தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் அஜித் - ஷாலினி. இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தின் போது காதலிக்க தொடங்கினர். அப்படம் ரிலீஸ் ஆகி சக்சஸ் ஆனதைபோல் இவர்கள் காதலும் சக்சஸாக திருமணத்தில் முடிந்தது. அமர்க்களம் படம் வெளியான பின்னர் அஜித்தும் ஷாலினியும் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் காதலித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி பார்க்கலாம்.
அஜித் - ஷாலினி
அஜித் - ஷாலினி லவ் ஸ்டோரி
அஜித்தும், ஷாலினியும் அமர்க்களம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது, எதிர்பாராத விதமாக ஷாலினியின் கையில் அஜித் வைத்திருந்த கத்தி பட்டு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன அஜித், ஷாலினியை ஆஸ்பத்திரியில் அனுமதித்தது மட்டுமின்றி, அவர் கூடவே இருந்து அக்கறையோடு பார்த்துக் கொண்டாராம். அஜித்தின் இந்த குணம் ஷாலினிக்கு மிகவும் பிடித்துப் போக, அப்போதில் இருந்தே அஜித்மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி இருக்கிறது.
அஜித் ஷாலினி காதல்
அஜித் ஷாலினி டேட்டிங்
அஜித்தும் ஷாலினியும் காதலித்தபோது செல்போன் என்பது பெரியளவில் பயன்பாட்டில் இல்லை. அப்போது நிறம் என்கிற மலையாள படத்தில் ஷாலினி நடித்து வந்துள்ளார். அதில் குஞ்சக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். அப்போது அவர் எரிக்சன் மொபைல் பயன்படுத்தி வந்துள்ளார். ஷாலினியின் பெற்றோரும் அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார்களாம். அப்போது நேரடியாக சென்று பேச முடியாது என்பதால் குஞ்சக்கோ போபனின் மொபைலுக்கு போன் போட்டு பேட்டு ஷாலினியிடம் பேசுவாராம் அஜித்.
அஜித் மனைவி ஷாலினி
அஜித் - ஷாலினி கோர்டு வேர்டு
அப்போது அஜித்திடம் இருந்து அழைப்பு வந்தால், சோனா ஏகே 47-னிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது என்று சொல்லி ஷாலினியை அழைப்பாராம் குஞ்சக்கோ போபன். ஏனெனில் நிறம் படத்தில் நடிகை ஷாலினி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் சோனா. அதை கோர்டு வேர்டாக பயன்படுத்தி இருக்கிறார் குஞ்சக்கோ போபன். இதனால் அவர் அஜித்திடம் தான் பேசுகிறார் என்பது பிறருக்கு தெரியாமல் இருக்கவே இருவரும் இவ்வாறு கோர்டு வேர்டு வைத்து பேசி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

