அஜித்தின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய ஷாலினி - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் அஜித்தின் பிறந்தாளை ஒட்டி அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளார் ஷாலினி.

Ajith Kumar Birthday Celebration : ஒவ்வொரு ஆண்டும் மே 1ந் தேதி என்றால் அனைவருக்கும் உழைப்பாளர் தினம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, அன்று அஜித் குமாரின் பிறந்தநாள் என்பது நிச்சயம் நினைவுக்கு வரும். அவரின் பிறந்தநாளை ஒரு திருவிழாவாக அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதுமட்டுமின்றி சமீப காலமாக அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அதனை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித் பிறந்தநாள்
அஜித்துக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
இந்த ஆண்டு கூட அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த பில்லா, வீரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளன. நடிகர் அஜித் குமாருக்கு இந்த ஆண்டு பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷலானது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஆண்டில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக குட் பேட் அக்லி படத்தின் வெற்றி, கார் ரேஸ் வெற்றி மற்றும் முக்கியமாக பத்ம பூஷன் விருது என அடுத்தடுத்து அவருக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்து வருகிறது.
மனைவி ஷாலினி உடன் அஜித்
அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் அஜித் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் என்றாலே சோசியல் மீடியாவில் அவரை வாழ்த்தி பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒரு புறம் இருக்க சரியாக நள்ளிரவு 12 மணியளவில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அஜித்தின் மனைவி ஷாலினி, அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அஜித், ஷாலினி
அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பரிசு
ஆனால் அந்த புகைப்படங்கள் இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு எடுத்தது அல்ல, கடந்த ஆண்டு அஜித்தின் 53வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்ததாகும். அப்போது அஜித்தின் விலையுயர்ந்த பைக் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார் ஷாலினி. அந்த பைக்கில் இருவரும் ஜோடியாக அமர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளனர். சிறந்த நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும் என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஷாலினி. இதைப்பார்த்த ரசிகர்கள், இந்த ஆண்டு எடுத்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிருமாறு கேட்டு வருகின்றனர்.