காதல் முதல் மோதல் வரை அஜித் சந்தித்த சர்ச்சைகள் ஒரு பார்வை
அஜித் குமார் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவர் திரையுலகில் சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ajith Kumar Controversies : தல அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றி வரும் இவர், சினிமாவை தாண்டி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் வென்று பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இருப்பினும், ஒவ்வொரு உச்ச நட்சத்திரத்தைப் போலவே, அஜித்தும் சர்ச்சைகள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் இருந்தன. அவரது பிறந்தநாளில், அவரது காதல் வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த சர்ச்சைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அஜித் - ஹீரா
அஜித் குமாரின் ஆரம்பகால காதல் உறவுகள்
தனது மனைவி ஷாலினியை கரம்பிடிப்பதற்கு முன்பு, அஜித் குமார் நடிகை ஹீரா உடன் மூன்று ஆண்டுகள் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நேர்காணலில், காதலியின் பிரிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாகவும், பல பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும் அவரே கூறி உள்ளார். இவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்தன, எனவே அது அவருக்கு இன்னும் சவாலானதாக இருந்தது.
அஜித், ஷாலினி
அஜித் - ஷாலினி காதல் கதை
அமர்க்களம் படப்பிடிப்பில் நடிகை ஷாலினியை அஜித் குமார் சந்தித்தார், படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், அப்போதிருந்து இன்று வரை இருவருக்கும் இடையேயான காதல் குறையவில்லை. அஜித்துக்காக தன்னுடைய கெரியரையே தியாகம் செய்த ஷாலினி, திருமணத்துக்கு பின் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகினார்.
அஜித்
திரையுலகப் பிரச்சினைகள்
தமிழ் திரையுலகில் அஜித் குமாருக்கு அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக படத்தில் கமிட்டாகிவிட்டு சில பிரச்சனைகளால் அதில் இருந்து விலகி இருந்தார். நான் கடவுள், கஜினி போன்ற படங்களில் பர்ஸ்ட் சாய்ஸ் ஆக இருந்தது அஜித் தான். ஆனால் இயக்குனர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த படங்களில் அவரால் நடிக்க முடியாமல் போனது.
அரசியல் அறிக்கை & பொது கருத்துகள்
அஜித் வாழ்க்கையில் ஒருபோதும் அரசியல்வாதியாக இருந்ததில்லை, இருப்பினும் அரசியல்வாதிகளையே தன்னுடைய பேச்சால் மிரள வைத்தவர் அஜித். ஒரு முறை கலைஞர் முன்னிலையிலேயே தன்னை கட்டாயப்படுத்தி விழாவுக்கு அழைத்து வந்தனர் என மேடையில் அஜித் பேசியது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.
அஜித் சர்ச்சை
ரசிகர்கள் மோதல்
மிகப்பெரிய தமிழ் நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், விஜய் போன்ற மற்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளார். இதன் விளைவாக சமூக ஊடகங்களில் இரு நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரசிகர்கள் எல்லைமீறி நடந்துகொண்டால் அதை கண்டித்தும் இருக்கிறார் அஜித்.