MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மறுபடி ஒரு டைவர்ஸா! தனுஷ், ஜிவி வரிசையில் விவாகரத்தை அறிவித்த பிரபல இயக்குனர்

மறுபடி ஒரு டைவர்ஸா! தனுஷ், ஜிவி வரிசையில் விவாகரத்தை அறிவித்த பிரபல இயக்குனர்

தனுஷ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் விவாகரத்து முடிவை அறிவித்த நிலையில், தற்போது பிரபல இயக்குனரும் தன் மனைவியை பிரிவதாக அறிவித்து இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 12 2024, 07:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Dhanush, GV Prakash, Seenu Ramasamy

Dhanush, GV Prakash, Seenu Ramasamy

கோலிவுட்டில் தொடரும் விவாகரத்து

தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது தற்போது ஒரு டிரெண்டாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து முடிவை அறிவித்த பிரபலங்கள் ஏராளம். இயக்குனர் பாலா தன் மனைவி மலரை பிரிந்தார். இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் டி இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதேபோல் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடிக்கு இந்த ஆண்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  - சைந்தவி ஜோடி விவாகரத்து முடிவை அறிவித்தனர். நடிகர் ஜெயம் ரவியும் தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அந்த லிஸ்ட்டில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Director Seenu Ramasamy

Director Seenu Ramasamy

யார் இந்த சீனு ராமசாமி?

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சீனு ராமசாமி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல் நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி 2 தேசிய விருதுகளையும் வென்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களை இயக்கினார் சீனு ராமசாமி.

இதையும் படியுங்கள்... Vairamuthu : "என் இதயத்தை அசைத்த உங்கள் வரிகள்".. சீனு ராமசாமியின் புதிய கவிதை தொகுப்பு - வாழ்த்திய வைரமுத்து!

35
Seenu Ramasamy Divorce

Seenu Ramasamy Divorce

சீனு ராமசாமி விவாகரத்து

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் சீனு ராமசாமி, கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி சுமார் 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி.

45
Seenu Ramasamy X Post

Seenu Ramasamy X Post

சீனு ராமசாமி பதிவு

அதில், “அன்பானவர்களுக்கு வணக்கம்; நானும் எனது மனைவி GS தர்ஷனாவும், எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும்  தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” என பதிவிட்டுள்ளார்.

55
Seenu Ramasamy announced Divorce

Seenu Ramasamy announced Divorce

விவாகரத்து சீசனா?

ஏற்கனவே இந்த ஆண்டு ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ் ஆகியோரின் விவாகரத்து அறிவிப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது சீனு ராமசாமியும் இந்த முடிவை எடுத்துள்ளதால் கோலிவுட்டில் இது விவாகரத்து சீசனா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனர் சீனு ராமசாமி கைவசம் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் படமும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் திரைப்படமும் உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘மாமனிதன்’களுக்கு கிடைத்த அங்கீகாரம்... விஜய் சேதுபதி, சீனு ராமசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved