- Home
- Cinema
- நானே ஸ்டாலின அங்கிள்னு தான் கூப்பிடுவேன்! விஜய் சொன்னது ஒன்னும் தப்பில்லை! KS ரவிக்குமார்!
நானே ஸ்டாலின அங்கிள்னு தான் கூப்பிடுவேன்! விஜய் சொன்னது ஒன்னும் தப்பில்லை! KS ரவிக்குமார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் விஜய் ஸ்டாலினை அங்கிள் என விமர்சித்த விஜய்க்கு இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தவெக மதுரை மாநாடு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு மதுரையில் நடைபெற்றது. அப்போது பேசிய தவெக தலைவர் விஜய் ஸ்டாலினை அங்கிள் என விமர்சித்திருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் விஜய்யை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அங்கிள் என்ற வார்த்தை தவறான வார்த்தை ஒன்றும் இல்லை என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்
காஞ்சிபுரத்தில் திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டியளிக்கையில்: படையப்பா திரைப்படம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் தயாராக உள்ளது. விரைவில் வெளியாகும். ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து இயக்க நான் தயாராக இருக்கிறேன். அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எந்தப் படம் எடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் வருவது உண்டு, அந்த காலம் படம் வெளியான பிறகு விமர்சனங்கள் பேச வாய்ப்பில்லை தற்பொழுது கலவையான விமர்சனங்கள் பேச வாய்ப்பு கிடைக்கிறது. இதில் படத்தின் முடிவில் எவ்வளவு கலெக்சன் என்பது தான் தீர்மானிக்கும்.
நடிகர் விஜய்
தவெக தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அங்கிள் என கூப்பிட்டதில் தவறு கிடையாது. நிஜமாகவே நேரில் பார்க்கும் போது குட் மார்னிங் அங்கிள்.. எப்படி இருக்கீங்க? என்று தான் விஜய் கேட்பார். அதை இன்று பொதுமக்கள் மத்தியில் சொல்லி இருக்கிறார். விஜய் எப்போதும் போல் அங்கிள் என அழைத்ததை வேற மீனிங்கில் எடுத்துக் கொண்டு வேறு மாதிரி ஒரு குரூப் பேசுகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின்
இதை விட்டு விட்டு நாட்டுக்கு என்ன நல்லதோ அதை செய்ய வேண்டும். நானேகூட ரெட் ஜெயிண்ட்ஸ்க்கு படம் செய்த காலத்தில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினை சார்-ஐ அவர் வீட்டில் சந்திக்கையில் அக்கிள் என்றும் அவர் மனைவியை ஆன்டி என்றும் கூப்பிட்டுள்ளேன். அங்கிள் என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழில் மாமா என்று அழைத்தால் தவறாகிவிடும் என தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

