- Home
- Cinema
- துணிவு படத்தின் துணிச்சலான வெற்றி! ஹார்டிக் அடித்த மகிழ்ச்சியை சபரிமலையில் ரசிகர்களுடன் கொண்டாடும் எச்.வினோத்
துணிவு படத்தின் துணிச்சலான வெற்றி! ஹார்டிக் அடித்த மகிழ்ச்சியை சபரிமலையில் ரசிகர்களுடன் கொண்டாடும் எச்.வினோத்
இயக்குனர் எச்.வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்தை வைத்து இயக்கி வெற்றியை கொடுத்துள்ள நிலையில், இந்த வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதே நாளில் தளபதி விஜயின் வாரிசு படமும், வெளியாகி இரு படங்களும்... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'துணிவு' திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில், 'வாரிசு' படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்தது.
இரு படங்களுமே, விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியிலும், பரபரப்பான போட்டா போட்டிக்கு இடையே வெளியாகி கடந்த மூன்று நாட்களாக, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துணிவு படம் உலக அளவில் 100 கோடி வசூலை எட்டி விட்ட நிலையில், 'வாரிசு' திரைப்படம் 100 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'துணிவு' படம் வெளியாகி வெற்றி பெற்ற கையேடு, இயக்குனர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றார்.
துணிவு - வாரிசு இடையே நடக்கும் கடும் போட்டி! 3வது நாளில் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்?
நேற்றைய தினம் இயக்குனர் எச்.வினோத் மாஸ்க் அணிந்து கொண்டு, சபரிமலைக்கு சென்ற வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது சில ரசிகர்களுடன் சபரிமலையில் நின்றபடி எச்.வினோத் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்... இயக்குனர் எச் வினோத் தன்னுடைய ஹார்டிக் வெற்றியை... சபரிமலையில் ரசிகர்களுடன் கொண்டாடி வருவதாக கூறி வருகிறார்கள்.
எச்.வினோத் இயக்கத்தில், ஏற்கனவே அஜித் நடித்து வெளியான 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற நிலையில்... தற்போது வெளியாகியுள்ள 'துணிவு' திரைப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை தன்வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் எச்.வினோத்தின் புகைப்படங்களும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக எச்.வினோத் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.