- Home
- Cinema
- பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ் படம்..! வேண்டவே வேண்டாம் என எச்சரிக்கும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ் படம்..! வேண்டவே வேண்டாம் என எச்சரிக்கும் ரசிகர்கள்
Ponniyin selvan vs Naane varuven : வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக தனுஷின் நானே வருவேன் படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பி கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் பிளாப் ஆகின. அந்த மூன்று படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானவை, அதனால் ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ். அவர் நடித்துள்ள 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி வருகிற ஜூலை 22-ந் தேதி, அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் ரிலீசாக உள்ளது.
இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... அறிவிப்பு வரும் முன்பே லீக் ஆன ‘தளபதி 67’ டைட்டில்... இதென்னப்பா கவுதம் மேனன் பட தலைப்பு மாதிரி இருக்கு!
இதுதவிர நானே வருவேன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜாவும், எல்லியும் நடித்துள்ளனர். இப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனும் ரிலீசாக உள்ளது. இதற்கு போட்டியாக தனுஷ் படம் வெளியானால் குறைந்த அளவிலான தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகும். அதனால் அப்படத்துக்கு போட்டியாக வெளியிட வேண்டாம் என தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மச்சக்காரன்யா இந்த விஜய் தேவரகொண்டா..! டேட்டிங் செல்ல போட்டி போடும் பாலிவுட் நடிகைகள்