புது படங்களுக்கு - பழைய டைட்டில்; சிவகார்த்திகேயன் சாதனையை முறியடித்த தனுஷ்!
பழைய படங்களின் டைட்டிலை பயன்படுத்துவதில் நடிகர்களுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில் தனுஷின் படங்களுக்கு தான் இதுவரை அதிக முறை பழைய படங்களின் வைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

பழைய டைட்டிலுக்கு போட்டி:
தமிழ் சினிமாவில் இப்போது புதிய டிரெண்ட் ஒன்று உருவாகி வருகிறது. பழைய படங்களின் டைட்டிலை தங்களின் புதிய படங்களுக்கு பயன்படுத்துவது. இப்படி பழைய படங்களின் டைட்டிலில் எடுக்கப்படும், படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதால் என்னனோ இதை ஒரு வழக்கமாக சில நடிகர்கள் வைத்துள்ளனர்.
அதற்கு உதாரணமாக தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை சொல்லலாம். இவர்கள் இருவர் தான் பழைய படங்களின் டைட்டிலை பயன்படுத்துவதில் மிகவும் எக்ஸ்பெர்ட்ஸ். அந்த டைட்டிலை வைத்து ஹிட்டும் கொடுத்திருக்கின்றனர். இவ்வளவு ஏன் தனுஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது கூட பழைய டைட்டிலை வைத்து எடுக்கப்பட்ட அசுரன் படம் தான்.
முதலிடத்தில் தனுஷ்
பழைய படங்களின் டைட்டிலை அதிகமாக பயன்படுத்தியவர்களின் பட்டியலில் தனுஷ் தான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பிறகு 2ஆவது இடத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இதுவரையில் 25 படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் கடைசியாக தனது 24ஆவது படமான அமரன் படத்தில் நடித்தார். இது நவரச நாயகன் கார்த்திக்கின் பட டைட்டிலாகும். அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கார்த்திக்கிடம் கதையை பற்றி அதற்குரிய அனுமதியை பெற்றிருக்கின்றனர். இப்போது தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்திற்கு 'பராசக்தி' என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்தின் டைட்டிலை வைத்து டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
'ஸ்குவிட் கேம்' ஃபைனல் சீசன் ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிலிக்ஸ்!
சிவகார்த்திகேயனின் 25-ஆவது படம் பராசக்தி
இதே போன்று விஜய் ஆண்டினியின் 25ஆவது படத்திற்கு தெலுங்கில் பராசக்தி என்றும் டைட்டில் வைக்கப்பட்டது. இது கடந்த சில நாட்களாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயனின் டான் பிக்ஸர்ஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனியும் பேச்சுவார்த்தை நடத்தவே பராசக்தி பிரச்சனை முடிவுக்கு கொண்டுவந்தது.
சிவகார்த்திகேயன் நடித்த பழைய பட டைட்டில்
இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன், நாகேஷின் எதிர்நீச்சல், ரஜினிகாந்தின் வேலைக்காரன், கமல் ஹாசனின் காக்கி சட்டை, ரஜினியின் மாவீரன், கார்த்திக்கின் அமரன் ஆகிய பழைய பட டைட்டில்களில் நடித்திருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே நடிகர் தனுஷ் பல நடித்துள்ளார். இதில் மாவீரன், வேலைக்காரன் போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் மற்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கல்லா கட்டியது.
சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய தனுஷ்
ஆனால் சிவகார்திகேயனையே பீட் செய்து முதல் இடத்தில் இருப்பது தனுஷ் தான். இயக்குனர் வெற்றி மாறன் தனுஷை வைத்து இயக்க படத்திற்கு 1980 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ரஜினியின் பொல்லாதவன் பட டைட்டிலை சூட்டினார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, இதை தொடர்ந்து கமல் நடித்த உத்தம புத்திரன், ரஜினிகாந்தின் மாப்பிள்ளை, தங்க மகன், அருண் பாண்டியன் நடித்த அசுரன், சத்யராஜ் நடித்த மாறன், ரகுமான் நடித்த நானே வருவேன், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் என்று கிட்டத்தட்ட 9 பழைய படங்களில் பழைய டைட்டிலை தனுஷ் பயன்படுத்தி ஹிட் கொடுத்திருக்கிறார். இதில் அசுரன் படத்திற்காக, தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.