'ஸ்குவிட் கேம்' ஃபைனல் சீசன் ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிலிக்ஸ்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது மற்றும் ஃபைனல் சீசனான 'ஸ்குவிட் கேம் ' வெப் தொடரின் ரிலீஸ் தேதியை நெட்பிலிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்குவிட் கேம்:
'ஸ்குவிட் கேம்' ஒரு வினோதமான விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வலைதள தொடராகும். வித்தியாசமான அனுபவத்தை தேடும் ரசிகர்களுக்கு இந்த தொடர் விருந்தாக அமைந்தது. கொரியன் வெப் தொடரான இதன் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் மூன்றாவது பாகமும், ஃபைனல் சீசனுமான 'ஸ்குவிட் கேம் 3' ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்குவிட் கேம் சீசன் 2 செய்த சாதனை
ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் கூற்றுப்படி, நெட்ஃபிளிக்ஸின் நெக்ஸ்ட் ஆன் நெட்ஃபிளிக்ஸ் விளக்கக்காட்சியின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்குவிட் கேம் நெட்ஃபிளிக்ஸின் மிகவும் பிரபலமான வலைத்தொடராக இருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 26 - ஆம் தேதி அன்று வெளியானது. மேலும் இந்த தொடர் வெளியான ஒரே வாரத்தில் அமெரிக்காவில் 4.92 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டு சாதனை செய்தது.
ஸ்குவிட் கேம் முடிவுக்கு கொண்டு வரும் நெட்பிலிக்ஸ்
ஸ்குவிட் கேம் வெப் தொடரை இந்த ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. நெட்ஃபிளிக்ஸின் கூற்றுப்படி, இந்த கொடிய விளையாட்டை நிறுத்துவதற்கான தனது பணியை Gi-hun (Lee Jung-jae) தொடர்கிறார். இதற்கிடையில், The Front Man (Lee Byung-hun) தனது அடுத்த நகர்வுக்குத் தயாராகிறார், மீதமுள்ள வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். இதையே வெளிப்படுத்தும் விதத்தில் நெட்ஃபிளிக்ஸ் மூன்றாவது சீசனுக்கான புதிய போஸ்டரை "இறுதி ஆட்டத்திற்கு தயாராகுங்கள்" என்ற வாசகத்துடன் வெளியிட்டது.
மூன்றாவது சீசன் பற்றி வெளியான தகவல்
மூன்றாவது சீசன் மிகவும் தீவிரமான மற்றும் கொடூரமான இறுதிப் போட்டியைக் குறிப்பதாக உள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக உள்ள இந்த ஸ்குவிட் கேம் தொடரின் நிறைவு பகுதியை ஜூன் 27, 2025 ரசிகர்கள் தமிழிலும் கண்டு ரசிக்கலாம்.