MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிதி நடிப்பதற்கு ஷங்கர் போட்ட கண்டீஷன் என்ன தெரியுமா?

அதிதி நடிப்பதற்கு ஷங்கர் போட்ட கண்டீஷன் என்ன தெரியுமா?

நான் சினிமாவில் நடிகையாக வருவதற்கு என்னுடைய அப்பா கண்டிஷன் போட்டார் என்று நடிகை அதிதி ஷங்கர் ஓபனாக பேசியிருக்கிறார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 31 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இயக்குனரின் வாரிசு அதிதி:

இயக்குனரின் வாரிசு அதிதி:

சினிமா பின்னணியை வைத்து நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் காலூன்றி வரும் நிலையில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் தனது டாக்டர் வேலையை தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார். 

25
ஷங்கரின் அடுத்தடுத்த தோல்வி:

ஷங்கரின் அடுத்தடுத்த தோல்வி:

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தை இயக்கி தன்னை ஒரு வெற்றிப்பட  இயக்குநராக கோலிவுட் திரையுலகில் நிலை நிறுத்திக்கொண்டு இவர் . அதன் பிறகு, காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் என்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஆனால், கடைசியாக அவர் இயக்கிய இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை.

தமன்னா - விஜய் வர்மா பிரேக்கப்பா? ரகசிய பதிவால் பரபரப்பு!

35
அதிதி ஷங்கரின் கைவசம் உள்ள படங்கள்:

அதிதி ஷங்கரின் கைவசம் உள்ள படங்கள்:

தற்போது இந்திய 3 படம் கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முத்தையா இயக்கிய இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்காத போதிலும், 2 ஆவதாக மாவீரன் படத்தில் நடித்தார். இந்தப் படங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா படம் வெளியானது. காதல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

45
பாடகியாகவும் தடம் பதித்த அதிதி:

பாடகியாகவும் தடம் பதித்த அதிதி:

சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மதுர வீரன் என்ற பாடலை பாடி, தன்னை ஒரு பாடகியாகவும் அடையாள படுத்திக்கொண்டார் அதிதி. 2ஆவது படத்தில் வண்ணாரப்பேட்டை என்ற பாடையும் பாடி அசத்தினார். ஒரு நடிகையும் தாண்டி பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் தான் நேசிப்பாயா படத்தின் புரமோஷனின் போது அதிதி ஷங்கர் பேசியது இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது. 

சினேகன் - கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தை; உச்ச கட்ட மகிழ்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட ஜோடி!

55
ஷங்கர் போட்ட கண்டீஷன்:

ஷங்கர் போட்ட கண்டீஷன்:

அதில், சினிமாவுக்கு வருவதற்கு முன் என் அப்பா ஒரு கண்டீஷன் போட்டார். அதில், மருத்துவருக்கு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பு முடிந்ததும் நடிக்க ஆர்வம் காட்டுவேன் என்று கூறியிருந்தேன். அதற்கு அப்பா ரொம்ப யோசித்தார். கடைசியாக, ஒரு கண்டிஷன் போட்டார்.  நான் சினிமாவில் ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் டாக்டருக்கான வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அப்பாவோட கண்டிஷன். கூறியுள்ளார். ஆனால் சினிமாவில், தற்போது அதிகம் ரசிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார் அதிதி. தற்போது ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தவிர தெலுங்கில் கருடன் படத்தின் ரீமேக்காக உருவாகும் பைரவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
கோமதியை பகடைக் காயாக பயன்படுத்தும் தாய் கிழவி... ஈகோவை தூக்கி எறிவாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved