தமன்னா - விஜய் வர்மா பிரேக்கப்பா? ரகசிய பதிவால் பரபரப்பு!
நடிகை தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவை பிரிந்துவிட்டாரா? அவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதா? என பல கேள்விகளை எழுப்பி உள்ளது சமீபத்தில் இன்ஸ்ட்டா ஸ்டோரியில் தமன்னா போட்டிருந்த ஒரு பதிவு.

காதலரை அறிவித்த பின் திருமணம் செய்த நடிகைகள்
திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பல நடிகர் - நடிகைகள், காதலிக்க துவங்கி, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு சில நடிகைகள் தங்கள் காதலர்களை அறிமுகப்படுத்திய பல வருடங்களுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைவதை வழக்கமாக வைத்துள்ளனர். நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங், காஜல், தாப்சி, இலியானா போன்ற பலரை உதாரணமாக சொல்லலாம்.
திருமணம் எப்போது
இவர்களின் வரிசையில் நீண்ட காலமாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நடிகை தமன்னா, இதுவரை திருமணம் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் உள்ளார். திருமணம் எப்போது என்று பத்திரிகையாளர்கள் கேட்டால், ஏதாவது ஒன்றைச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறார். விஜய் வர்மாவும் இதுவரை திருமணம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
சினேகன் - கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தை; உச்ச கட்ட மகிழ்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட ஜோடி!
பிசியாக நடித்து வரும் காதல் ஜோடி
காதல் சமாச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும் இருவரும் நடிப்பில் படு பிசியாகி உள்ளனர். விஜய் வர்மா பாலிவுட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மற்றும், வலைத் தொடர்களில் நடித்து வருகிறார். தமன்னாவை இவர் காதலிக்க துவங்கிய கூட, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற அந்தாலஜி படத்தில் நடிக்கும்போது தான். ஆரம்பத்தில் நட்பாக பழக துவங்கி பின்னர் காதலாக மாறினர். லஸ்ட் ஸ்டோரிஸில் தமன்னாவுடன் இணைந்து மிகவும் நெருக்கமான காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
விஜய் வர்மா மீதான காதலை உடைத்து சொன்ன தமன்னா
ஒருமுறை தமன்னாவிடம் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்காத நீங்கள் திடீரென்று இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, விஜய் வர்மா என் வருங்கால கணவர், அதனால்தான் அப்படிப்பட்ட காட்சியில் நடித்தேன் என்று போல்டாக கூறினார் தமன்னா. இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், தற்போது இவர்களைப் பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது விஜய் வர்மாவை தமன்னா பிரிந்துவிட்டார் என்ற செய்தி தான் அது. அதற்குக் காரணம் தமன்னா வெளியிட்ட ஒரு பதிவு.
6 நாளில் 'வணங்கான்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'குடும்பஸ்தன்'!
தமன்னாவின் அதிர்ச்சி பதிவு
சமீபத்தில் தமன்னா, காதல் முறிவைச் சுட்டிக்காட்டும் வகையில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாகப் நெட்டிசன்கள் கொளுத்தி போட்டு வருகிறார்கள். தமன்னா தன்னுடைய பதிவில், ‘காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.
தமன்னா விஜய் வர்மா பிரேக்கப்பா?
இதனைக் கண்டு அவரது ரசிகர்கள், தமன்னா இப்படி ஒரு பதிவை போட காரணம் என்ன? என்றும் அவரின் காதலில் ஏதேனும் பிரச்சனையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமன்னா நெருக்கமானவரை பற்றி இந்த பதிவை போட்டுள்ளதால், ஒருவேளை தமன்னா காதலர் விஜய் வர்மாவை பிரிந்து விட்டாரா? என யூகத்தின் அடிப்படையில் பல வதந்திகள் பரவி வருகிறது. எந்த ஒரு வதந்திக்கு அதிரடியாக புற்றுப்புள்ளி வைக்கும் தமன்னா, இந்த விஷயம் குறித்தும் மௌனம் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்க வீட்டுலையே என்ன Kidnap பண்ணி அங்க தூக்கிட்டு போனாங்க; ஷாக் கொடுத்த நடிகர் மணிகண்டன்!