- Home
- Cinema
- வெற்றிமாறன் படத்துக்காக மாஜி மாமனார் ரஜினியுடன் கூட்டணி அமைத்த தனுஷ்..! வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்
வெற்றிமாறன் படத்துக்காக மாஜி மாமனார் ரஜினியுடன் கூட்டணி அமைத்த தனுஷ்..! வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்
நடிகர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின் அவருடனே இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூரி கதைநாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், நடிகை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் வெற்றிமாறனும், இளையராஜாவும் முதன்முறையாக இணைந்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மேடையில் ஜொலிக்கும் சோழர்கள்..பொன்னியின் செல்வன் விழா நாயகர்களின் புகைப்படங்கள் இதோ
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், விடுதலை படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷ், ரஜினி, கமல் ஆகியோர் பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷ் தனியாகவும், ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து பாடல் பாடி உள்ளார்களாம்.
நடிகர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின் அவருடனே இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் தனுஷ் பாடிய பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் ரஜினி, கமல் இணைந்து பாடியுள்ள பாடல் எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... மகளுடன் விடுமுறையை கழிக்கும் ஸ்ரேயா சரண்..குயூட் போட்டோஸ் இதோ