தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் பொன்னியின் செல்வன் விழாவில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளது
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது திரைக்கு வர தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கான உள்ள பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக வெளியாக உள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...மகளுடன் விடுமுறையை கழிக்கும் ஸ்ரேயா சரண்..குயூட் போட்டோஸ் இதோ
இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், உட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக இதன் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாக்கள் குறித்தான வீடியோக்களும் புகைப்படங்களும் ட்ரெண்டானதுடன் படம் குறித்தான வெகுவான பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...இரு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நயன்தாரா.. வெளியானது காட் ஃபாதர் ரிலீஸ் டேட்
இதற்கிடையே சமீபத்தில் பொன்னியின் செல்வனின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த், கமலஹாசன், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற இந்த விழா குறித்தான ரசிகர்களின் வீடியோக்கள் வைரல் ஆன நிலையில் தற்போது இதன் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் பொன்னியின் செல்வன் விழாவில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...முகப்பருவால் பறிபோன வாய்ப்பு..மனம் தளராமல் முயற்சி செய்யும் பாண்டியன் ஸ்டோர் நடிகை....அவரே சொன்ன குட் நியூஸ்
எம்ஜிஆர் முதல் கமலஹாசன் வரை பலர் முயற்சித்து விட்ட போதிலும் மணிரத்தினம் தற்போது இதை நனவாக்கியுள்ளார். இந்த படத்தின் முன்னோட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து படம் கட்டாயம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
