- Home
- Cinema
- டாடா வெற்றிக்கு பின் அனிருத் உடன் கூட்டணி அமைத்த கவின்.... இயக்கப்போகும் பிரபல டான்ஸ் மாஸ்டர்?
டாடா வெற்றிக்கு பின் அனிருத் உடன் கூட்டணி அமைத்த கவின்.... இயக்கப்போகும் பிரபல டான்ஸ் மாஸ்டர்?
டாடா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் கவின் நடிக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கவின், கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வரவேற்பை பெறாததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் கவின். அந்நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கவின் நடித்த லிப்ட் திரைப்படம் வெளியானது. இப்படம் நேரடியாக ஓடிடி வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடித்த டாடா திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கணேஷ் கே பாபு இயக்கிய இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... செல்லக்குட்டி ராசாத்தி... போறதென்ன சூடேத்தி! இணையத்தை கலக்கும் நிதி அகர்வாலின் கிக்கான கிளாமர் போட்டோஸ்
இதற்கு அடுத்தபடியாக ஊர்க்குருவி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார். இந்நிலையில், கவின் நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
அதன்படி கவின் நடிக்க உள்ள புதிய படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தான் இயக்க உள்ளாராம். உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, பீஸ்ட் என ஏராளமான படங்களில் நடிகராகவும் கலக்கிய சதீஷ், கவின் நடிக்க உள்ள புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... சொந்தக்காரர்களாக இருந்தும் பேசிக்கொள்ளாத விக்ரம் - தியாகராஜன்... தாய்மாமன் உறவை சீயான் தூக்கியெறிந்தது ஏன்?