பங்கமாக அடி வாங்கிய 'கஸ்டடி'..! 6 நாட்களில் படு மோசமான வசூல்.. முழு விவகாரம் இதோ!
வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர்நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படம் 6 நாட்களில் மிக மோசமான வசூலையே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், தனித்துவமான பாணியில்... மிகவும் ஜாலியான படங்களை இயக்கி வெற்றி இயக்குனர் என பெயரெடுத்தவர் வெங்கட் பிரபு. குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான, சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
Custody Movie Review
அதே நேரத்தில் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மாஸ் மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய பிரியாணி ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியையும் சந்தித்துள்ளது. வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர், தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கிய திரைப்படம் கஸ்டடி. இந்த படத்தில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா நடித்திருந்திருந்தார்.
Custody Movie Review
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் உருவானது. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். இப்படம் வாரம் மே 16-ஆம் தேதி வெளியான நிலையில், 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Custody Movie Review
அதன்படி, இப்படம் 6 நாட்களில் இந்தியாவில் 10 கோடி வசூலை கூட இன்னும் பெற வில்லையால். அதே போல் வெளிநாடுகளிலும் இப்படம் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த வசூலையும் பெறவில்லை என கூறப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.