ரஜினிகாந்தின் மிரட்டல் லுக்! மகள் ஐஸ்வர்யாவுடன் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தலைவர்! வைரலாகும் போட்டோஸ்!
'லால் சலாம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம் ' படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை... லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
'லியோ' படத்தில் தளபதிக்கு தந்தை இவரா? வேற லெவல் இருக்கும் போலயே படம்.. வெளியான மாஸ் அப்டேட்!
இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கிறார்? என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் ஹீரோயின்கள் இல்லாமல் எடுக்கப்படுகிறதா என்றும், கேள்வி எழுப்பினர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதால், இப்படத்தில் சில கிரிக்கெட் வீரர்களும் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது.
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் மீதான தடை நீக்கம்! உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு..!
அந்த வகையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்... இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கிய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது... சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதில் தலைவர் ரஜினிகாந்த், தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன்.. படு மாஸான கெட்டப்பில், காதோரம் நரை முடி, கண்ணாடி, மற்றும் வேலை ஜிப்பாவில் உள்ளார். அண்ணாமலை பட ரஜினிகாந்த் சாயலை இப்படத்தில் கொஞ்சம் ஸ்டைலிஷாக பார்ப்பது போல் அவரின் தோற்றம் உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீர் என சந்தித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்! வைரலாகும் புகைப்படம்..!
மேலும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, மிகவும் களைப்பாக இருப்பதையும் இந்த புகைப்படங்களில் பார்க்கமுடிகிறது. ஷூட்டிங் பணிக்காக அதிக நேரம் வெளியிலில் நிற்பதால், அவரின் முகம் டேன்னாகி விட்டது. இந்த BTS புகைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.