கூலி படம் எப்படி இருக்கு! நம்ம துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் கொடுத்துட்டாரு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூலி படத்தை பார்த்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கூலி விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. ஆமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர், நாகார்ஜூனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ்
கூலி படத்தின் முன்பதிவு கடந்த 8-ஆம் தேதி துவங்கியவுடன், சில மணி நேரங்களுக்குள் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. ஆகஸ்ட் 15 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்கள் காரணமாக, முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவிலேயே நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி
முன்பதிவு வசூலில் மட்டுமே ரூ.60 கோடிக்கும் அதிகமான தொகையை ஈட்டியுள்ள ‘கூலி’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் நாளை (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில், இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஜினி 50 ஆண்டு சாதனை
இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “கலையுலகில் தனி இடத்தைப் பிடித்துள்ள ரஜினிகாந்தின் இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று அவர் கூறினார். மேலும், நாளை வெளியாகும் ‘கூலி’ திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
கூலி படம் உதயநிதி கருத்து
‘கூலி’ படத்தைப் பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்த உதயநிதி, “அனைத்து தரப்பினரையும் கவரும் Mass Entertainer-ஆக கூலி திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படைப்பு மாபெரும் வெற்றி பெற, படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறினார்.