- Home
- Cinema
- லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் பிக்பாஸ் ராஜு வரை! குக் வித் கோமாளி போட்டியாளர்கள் முழு லிஸ்ட்!
லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் பிக்பாஸ் ராஜு வரை! குக் வித் கோமாளி போட்டியாளர்கள் முழு லிஸ்ட்!
Cooku with Comali Season 6 Full Contestants : விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும், 'குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் துவங்க உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள மொத்த போட்டியாளர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

ஒரு சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாகவும், கலகலப்புடனும் கொண்டு செல்லலாம் என நிரூபித்தது 'குக் வித் கோமாளி'. முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுத்து வருவதால் தற்போது 'குக் வித் கோமாளி' வெற்றிகரமாக 6 சீசன்களை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே இந்த நிகழ்ச்சி குறித்த புரோமோக்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் ஞாயிற்று கிழமை முதல் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்க உள்ளது.
இந்த முறை மூன்று செஃப்:
போட்டியாளர்களை அறிவிக்கப்பதற்கு முன்னர், இந்த முறை, அதாவது... 'குக் வித் கோமாளி சீசன் 6' நிகழ்ச்சியில் செஃப் தாமு, மற்றும் மத்தம்பட்டி ரங்கராஜனுடன் சேர்ந்து இந்த முறை செஃப் கௌஷிக்கும் இணைவது உறுதியானது.
ஏற்கனவே உறுதியான 4 போட்டியாளர்கள்:
அதே போல் சில நாட்களுக்கு முன்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய 4 போட்டியாளர்கள் யார் யார் என்கிற அறிவிப்பு வெளியானது. அதன்படி, சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்திருந்த உமர் லத்தீப், ஷபானா ஆகியோர் கலந்து கொள்வது உறுதியானது.
போட்டியாளர்களின் முழு விவரம்:
இவர்களை தொடர்ந்து, நேற்று இரவு வெளியிடப்பட்ட புதிய புரோமோவில்... இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ள, மொத்த போட்டியாளர்களின் விவரங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி மதுமிதா, கஞ்சா கருப்பு, யூ டியூப் பிரபலம் சௌந்தர்யா, பிக்பாஸ் டைட்டில் ராஜு, மற்றும் விவசாயியான நந்தகுமார் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.
புதிய கோமாளிகளுடன் களைகட்ட போகும் குக் வித் கோமாளி:
இது யாருமே எதிர்பாராத பட்டியல் என்பதால் இந்த முறை நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை பழைய கோமாளிகளுடன் சௌந்தர்யா, பூவையார், உள்ளிட்ட நான்கு பேர் களமிறங்கி உள்ளதால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிகிறது.