- Home
- Cinema
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கும் புது நடுவர்; விஜய் டிவி கொடுத்த அதிரடி ட்விஸ்ட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கும் புது நடுவர்; விஜய் டிவி கொடுத்த அதிரடி ட்விஸ்ட்
விஜய் டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசனில் புது நடுவர் ஒருவர் களமிறங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

CWC 6: This season of Cook with Comali is on a different level! பிக் பாஸுக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் சக்கைப் போடு போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதில் முதல் நான்கு சீசன்கள் சக்கைப்போடு போட்டன. ஆனால் கடைசியாக நடந்து முடிந்த ஐந்தாவது சீசன் பல்வேறு சண்டைகளுடனும் சர்ச்சைகளுடனும் முடிவடைந்தது. இந்த சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டே டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
Madhampatty Rangaraj
குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சி
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பேமஸ் ஆனதற்கு குக்குகள், கோமாளிகள் மட்டுமின்றி அதன் நடுவர்களும் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களுக்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருந்து வந்தனர். ஆனால் கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதால், அவருக்கு பதில் புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறக்கப்பட்டார். இவர் நல்லபடியாக ஜட்ஜ் பண்ணினாலும் வெங்கடேஷ் பட் அளவுக்கு கலகலப்பானவராக இல்லை என்கிற விமர்சனமும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது இருந்தது.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி 6 அப்டேட் - மணிமேகலைக்கு பதில் ‘இந்த’ பிக் பாஸ் பிரபலமா?
cook with comali 6
குக் வித் கோமாளி சீசன் 6-ல் புது ட்விஸ்ட்
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்நிகழ்ச்சிக்கான புரோமோக்களும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த சீசனில் புது வரவாக பிக்பாஸ் செளந்தர்யா இடம்பெற்று இருக்கிறார். அவர் கோமாளியாக கலந்துகொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் மேலும் சில சர்ப்ரைஸ்களும் காத்திருக்கின்றன. அதில் ஒன்றாக, இந்த சீசனில் புது நடுவர் ஒருவரையும் களமிறக்கி உள்ளனர்.
New Judge in Cook With Comali 6
குக் வித் கோமாளியில் களமிறங்கும் புது நடுவர்
அதன்படி ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது செஃப் கெளஷிக் என்பவர் மூன்றாவது நடுவராக கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே மாஸ்டர் செஃப் என்கிற நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார். மூன்று நடுவர்களுடன் இந்த சீசன் நடைபெற உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு குட் பை; அதிரடியாக புதிய சேனலுக்கு தாவிய தொகுப்பாளினி மணிமேகலை!