MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவிக்கு குட் பை; அதிரடியாக புதிய சேனலுக்கு தாவிய தொகுப்பாளினி மணிமேகலை!

விஜய் டிவிக்கு குட் பை; அதிரடியாக புதிய சேனலுக்கு தாவிய தொகுப்பாளினி மணிமேகலை!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை, விலகியதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஒரேயடியாக விஜய் டிவியில் இருந்து விலகி புதிய சேனலுக்கு தாவியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 15 2025, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விஜய் டிவி தொலைக்காட்சி:

விஜய் டிவி தொலைக்காட்சி:

விஜய் டிவி தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக பல ரசிகர்களால் அதிகம் பார்த்து, ரசிக்கப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த ஆண்டு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறுமா? என மிகப்பெரிய சந்தேகம் இருந்த நிலையில் பின்னர் ஒருவழியாக ஒரு சில மாற்றங்களுடன் துவங்கப்பட்டது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வெங்கடேஷ் பட் வெளியேற்றம்:

வெங்கடேஷ் பட் வெளியேற்றம்:

முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரில் இருந்து வெங்கடேஷ் பட் விலக, அவருக்கு பதிலாக மதம்பட்டி ரங்கராஜன் நடுவராக உள்ளே வந்தார். ஒரு சில கோமாளிகள், விஜய் டிவியில் இருந்து அதிரடியாக சன் டிவியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்த 'டாப் குக்கு டூப்பு குக்கு' நிகழ்ச்சிக்கு சென்றனர்.

‘குக்கு வித் கோமாளி 5’ மணிமேகலைக்கு பதிலாக ரக்ஷனுடன் கைகோர்த்த பிரபலம்!!

36
குக் வித் கோமாளி:

குக் வித் கோமாளி:

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், ஷிவாங்கி குக்காக மாறியதால்... மணிமேகலை கோமாளியாக இருந்துவிட்டு சில வாரங்களிலேயே விலகினார். ஆனால் இதற்கான சரியான காரணத்தை அவர் கூறவில்லை. இதை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை, ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். 
 

46
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை:

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை:

ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில்,  இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைனல் நடந்த போது, மணிமேகலையிடம் பிரியங்கா தன்னை ஒரு சிறந்த தொகுப்பாளினி என்பதை வெளிப்படுத்த மணிமேகலை மீது தொடர்ந்து சில விமர்சனங்களை வைத்ததால், இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக மணிமேகலை போட்ட பதிவில் தெரிவித்து குக் வித கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார் மணிமேகலை . ஆனால் அந்த போட்டியாளரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர் சொன்னது பிரியங்காவை தான் என பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர்.

கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ் சொன்ன மணிமேகலை - குவியும் வாழ்த்து

56
பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு:

பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு:

இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையானதோடு... பிரியங்காவை விமர்சிக்கவும் வைத்தது. மற்ற குக் வித் கோமாளி போட்டியாளர்கள், இருவரையும் விட்டு கொடுக்காமல் பேசி வந்தனர். இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து ஒரேயடியாக விலகி வேறு ஒரு சேனலுக்கு தாவியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. 
 

66
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி:

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி:

 அதன்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தான் மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளாராம். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் தொகுப்பாளர் விஜய் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் அடுத்து துவங்க உள்ள சீசனை விஜயுடன் சேர்ந்து, மணிமேகலையும் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ப்ரியங்கா முதல் மாகாபா ஆனந்த் வரை - கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் டாப் 4 Anchors!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ
Recommended image2
Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
Recommended image3
This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved