MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லீக்கான குக் வித் கோமாளி போட்டியாளர் லிஸ்ட்; எதிர்நீச்சல் சீரியல் நடிகையும் இருக்காங்க!

லீக்கான குக் வித் கோமாளி போட்டியாளர் லிஸ்ட்; எதிர்நீச்சல் சீரியல் நடிகையும் இருக்காங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளப் போகும் பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 30 2025, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Cooku with Comali Season 6 Contestants : விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மே மாதம் முதல் வெற்றிகரமாக தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் புரோமோக்களும் வரிசையாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

24
சீரியல் நடிகை மதுமிதா

சீரியல் நடிகை மதுமிதா

குக் வித் கோமாளியில் எதிர்நீச்சல் நாயகி

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்த மதுமிதாவும் இந்த ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை காட்ட உள்ளாராம். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்கிற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீசனில் மதுமிதா ஹைலைட்டான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

Related Articles

Related image1
குக் வித் கோமாளி 6 அப்டேட் - மணிமேகலைக்கு பதில் ‘இந்த’ பிக் பாஸ் பிரபலமா?
Related image2
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கும் புது நடுவர்; விஜய் டிவி கொடுத்த அதிரடி ட்விஸ்ட்
34
நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்

நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்

சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி

இதுதவிர நடிகர் விஜய்யின் நண்பன் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான புரோமோவில் கூட குரேஷி தன் கையில் ஒரு கார்டு வைத்திருந்தார். அதில் ப்ரீத்தியின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்ததாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

44
குக் வித் கோமாளி நடுவர்கள்

குக் வித் கோமாளி நடுவர்கள்

குக் மட்டுமில்ல கோமாளிகளும் புதுசு

மேலும் இந்த சீசனில் புது கோமாளிகளையும் களமிறக்கி உள்ளனர். அந்த வகையில் புகழ், குரேஷி, சுனிதா, சரத், ராமர், என பழைய கோமாளிகள் சிலர் இருந்தாலும், புதுவரவாக பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், பாடகர் பூவையார், மற்றும் டோலி ஆகியோர் கோமாளிகளாக களமிறக்கப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு ஆகியோருடன் செஃப் கெளஷிக்கும் புது நடுவராக களமிறங்கி உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Related Stories
Recommended image1
குக் வித் கோமாளி 6 அப்டேட் - மணிமேகலைக்கு பதில் ‘இந்த’ பிக் பாஸ் பிரபலமா?
Recommended image2
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கும் புது நடுவர்; விஜய் டிவி கொடுத்த அதிரடி ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved