களைகட்டிய புகழ் - பென்சியா திருமண வரவேற்பு..! பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து... வைரலாகும் போட்டோஸ்!
விஜய் டிவி புகழ் மற்றும் பென்சியா திருமண வரவேற்பு நேற்று மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம், காமெடியனாக அனைவராலும் அறியப்பட்டவர் புகழ். அதிலும் இவர் லேடிஸ் கெட்டப் போட்டு நடிப்பதில் மிகவும் பிரபலம்.
'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி தான் இவருக்கு அறிமுகத்தை கொடுத்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.
குறிப்பாக புகழ் ஒரே காமெடியை திருப்பி திருப்பி செய்தாலும், அவரது ரியாக்ஷன் மற்றும் காமெடி சென்ஸுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பிரபலங்கள் கூட இவரது காமெடிக்கு ரசிகர்கள் தான்.
மேலும் செய்திகள்: ரொமான்ஸில் நயன் - விக்கிக்கு டஃப் கொடுக்கும்.. மஹாலட்சுமி - ரவீந்தர் ஜோடி..! வைரலாகும் நெருக்கமான புகைப்படம்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் புகழின் கைவசம் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் தற்போது உள்ளது.
அந்த வகையில் வலிமை, சபாபதி, எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்த அவர் அடுத்ததாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்படி ஒரு நிலையா? தீராத மனக்கஷ்டத்துக்கு காரணம் இந்த ஒரு படம் தான்.!
அதே போல் 'காசே தான் கடவுளடா', 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. விஜய் சேர்த்துபதியின் 46 ஆவது படம் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவர் தன்னுடைய காதலி பற்றி கூறி, விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறிய நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி இந்து முறைப்படி புகழ் - பென்சியா தம்பதிக்கு திண்டிவனம் அருகே உள்ள தீவனுர் விநாயகர் கோவிலில் திருமணம் நடந்தது.
இதை தொடர்ந்து பென்சியா குடும்பத்தினருக்காக, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட அதுவும் வைரலாக பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்: ரஜினியை வைத்து திட்டம் போடும் அரசியல் கட்சிகள் ..! ரசிகர்களுக்காக தலைவர் எடுத்த அதிரடி முடிவு..!
இந்நிலையில், புகழ் - பென்சியாவுக்கு நேற்று மிகவும் பிரமாண்டமாக சென்னையில் திருமண வரவேற்பு நடந்துள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
புகழ் டிப் டாப்பாக ப்ளூ கலர் ப்ளாஸர் அணிந்துள்ளார். பென்சியா சிவப்பு நிற லெஹன்கா அணிந்து அழகு தேவதை போல் மிளிர்கிறார். தற்போது இவர்களது திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.