ரஜினியை வைத்து திட்டம் போடும் அரசியல் கட்சிகள் ..! ரசிகர்களுக்காக தலைவர் எடுத்த அதிரடி முடிவு..!
ரஜினிகாந்தின் ஆதரவை பெற சில அரசியல் காட்சிகள் பக்காவாக பிளான் போட்டு வந்தாலும், ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியலுக்கு வருவார் என ஆவலுடன் பல வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், தற்போது மீண்டும் ரஜினிகாந்த் திரைப்பட பணிகள் மற்றும், ஆன்மீகத்தில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான், ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது.
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன், விநாயக், தமன்னா, ப்ரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் பொன்னர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இந்த படம் குறித்த தகவலும் சமூக வலைதளத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில், ட்ரெண்ட் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்: பாவனி - அமீருக்கு விரைவில் டும்.. டும்.. டும்..? கையில் கோப்பையை வாங்கிய பின் குட் நியூஸ் சொன்ன நடிகை..!
kamal rajini
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக கூறிவிட்டாலும், இவரது ஆதரவை பெற, பல அரசியல் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போது கூட, கமல் நேரடியாக ரஜினியை சந்தித்து ஆதரவு கோட்டத்திற்கு ரஜினி, தன்னுடைய ரசிகர்களை எவ்விதத்திலும் நிபந்தப்படுத்த மாட்டேன். நாட்டின் தலைவரை அவர்களே தேர்வு செய்வார்கள் என கூறி கமலுக்கு ஏமாற்றமான பதிலையே கொடுத்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், இந்த முறை ரஜினிகாந்தின் ஆதரவை பெற சில காட்சிகள் முனைப்பு காட்டி ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவியும் தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை, ரஜினிகாந்த் கவர்னர் பொறுப்பை ஏற்பதற்கு எந்த ஒரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமல் தொடர்ந்து பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
ரஜினிக்கு கவர்னர் பதவி கொடுத்தால்... அதை ஏற்றுக்கொள்வாரா? ஏற்க மாட்டாரா? என்கிற விவாதம் ஒரு புறம் அரசியலில் போய்க்கொண்டிருந்தாலும், தலைவர் வரும் ஏப்ரல் மாதத்தில் ரசிகர்களை சந்திக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் பின்னணி, ரஜினி கவர்னர் பதவியை ஏற்பதற்கு முன்பே ரசிகர்களை சந்திக்க வேண்டும் என அதிரடி முடிவை ரஜிகாந்த் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அரசியலே வேண்டாம் என நினைக்கும் ரஜினிகாந்த், என்ன முடிவு செய்வார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.