ரொமான்ஸில் நயன் - விக்கிக்கு டஃப் கொடுக்கும்.. மஹாலட்சுமி - ரவீந்தர் ஜோடி..! வைரலாகும் நெருக்கமான புகைப்படம்!
சீரியல் நடிகை மஹாலட்சுமிக்கும், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், இவர்களின் நெருக்கமான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறி தற்போது திருமண வாழ்க்கையிலும் இணைந்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி ஜோடி, தங்களுடைய திருமணம் திடீர் என்று முடிவு செய்த திருமணம் இல்லை என்றும், பெற்றோர் சம்மதத்துடன் நடந்ததாக பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
ஒரு வாரமாகவே இவர்களுடைய திருமணம் குறித்த பேச்சு தான், சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசு பொருளாக மாறியுள்ளது. சிலர் இந்த ஜோடிகள் குறித்து தொடர்ந்து சில விமர்சனத்தையும் முன் வைத்து வருகிறார்கள். இதற்கும் ரவீந்தர் - மஹா ஜோடி தங்களுடை பேட்டி மூலமாக பதிலடி கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.
மேலும் செய்திகள்: அதிர்ச்சி... கைவிரித்த குடும்பத்தினர்..! பாரதிராஜாவின் மொத்த மருத்துவச்செலவையும் ஏற்றாரா பிரபல அரசியல் தலைவர்?
திருப்பத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, சமீபத்தில் ஹனிமூனுக்காக மஹாபலிபுரம் சென்றிருந்தனர். இது குறித்த புகைப்படத்தையும் மஹாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஏகப்பட்ட ட்ரோல் வந்தாலும் இருவரும் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல், தங்களுடைய வாழ்க்கையை துவங்கியுள்ள நிலையில், இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் தன்னுடைய காதல் கணவர் ரவீந்தர் நெஞ்சில் மஹாலட்சுமி படுத்து தூங்குகிறார். இவர்களின் இந்த ஹாட் ரொமான்டிக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், நயன் - விக்கிக்கு இந்த புத்தம் ஜோடி டஃப் கொடுப்பதாக கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருந்தாலும், புதிய வாழ்க்கையின் துவக்கத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்படி ஒரு நிலையா? தீராத மனக்கஷ்டத்துக்கு காரணம் இந்த ஒரு படம் தான்.!