MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிர்ச்சி... கைவிரித்த குடும்பத்தினர்..! பாரதிராஜாவின் மொத்த மருத்துவச்செலவையும் ஏற்றாரா பிரபல அரசியல் தலைவர்?

அதிர்ச்சி... கைவிரித்த குடும்பத்தினர்..! பாரதிராஜாவின் மொத்த மருத்துவச்செலவையும் ஏற்றாரா பிரபல அரசியல் தலைவர்?

பிரபல மூத்த இயக்குனர் பாரதிராஜா, உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவரது மருத்துவ செலவை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும், அதனால் பிரபல அரசியல் கட்சி தலைவர் இவருடைய அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 06 2022, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி, தற்போதைய இயக்குனர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான, 'திருச்சிற்றம்பலம்' படத்திலும், நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை படக்குழு ஒருபுறம் கொண்டாடி வந்தாலும், இயக்குனர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, 'திருச்சிற்றம்பலம்'  பட குழுவினரை மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களையும் கடந்த சில நாட்களாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இயக்குனர் பாரதிராஜா நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த 23ஆம் தேதி, பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் அவருடைய உடல் நிலையில், எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் செய்திகள்: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்படி ஒரு நிலையா? தீராத மனக்கஷ்டத்துக்கு காரணம் இந்த ஒரு படம் தான்.!
 

36

பின்னர் இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து பாரதிராஜா தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில்,  "தன்னுடைய உடல் நிலை நலம் பெற்று வருவதாகவும், மருத்துவமனையில் தன்னை பார்க்க அனுமதி இல்லை என்பதால், தன்னை காண யாரும் வர வேண்டாம். பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

46

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகவுள்ள நிலையில், பாரதிராஜா பொது வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும் இவரை சந்திக்க நெருக்கமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா இருப்பதால் அவரது மருத்துவ செலவுகளுக்கும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்க அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் முன் வராமல் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்: ரஜினியை வைத்து திட்டம் போடும் அரசியல் கட்சிகள் ..! ரசிகர்களுக்காக தலைவர் எடுத்த அதிரடி முடிவு..!
 

56

எனவே இவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மிகவும் நெருக்கமான அரசியல் கட்சி தலைவர் ஆன, புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் ஏற்றுக் கொண்டுள்ளாராம். மேலும் விரைவில் பூரண நலம் பெற்று பாரதிராஜா வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

66

பாரதிராஜா பல வெற்றி படங்களை படங்களை இயக்கி உள்ளது மட்டுமின்றி, சமீப காலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் இவரது மருத்துவ செலவிற்கு கூட பணம் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுவது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்வித ஆதாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாரதிராஜா
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved