- Home
- Cinema
- யம்மாடியோ... குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை இத்தனை லட்சமா..!
யம்மாடியோ... குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை இத்தனை லட்சமா..!
Cook with comali 3 : ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசனும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

கலகலப்பும், விறுவிறுப்பும் நிறைந்த ரியாலிட்டு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது 3-வது சீசன் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது சீசனும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சியின் பைனல் எபிசோடு வருகிற ஞாயிறன்று ஒளிபரப்பாக உள்ளது. அதற்கு முன்னரே அதில் வெற்றிபெற்றது யார் என்பது குறித்த விவரம் லீக் ஆகி விட்டது. குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு அம்மு அபிராமி, ஸ்ருத்திகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யுலேகா ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகினர்.
இதையும் படியுங்கள்... பணம் புகழ் எல்லாமே இருக்கு.. ஆன சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம்கூட இல்ல.. நொந்துபோய் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி.
இதில் இறுதிப்போட்டியில் நடிகை ஸ்ருத்திகா தான் வெற்றி பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. இவருக்கு அடுத்து 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்தவர்கள் யார் யார் என்பது குறித்து விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் முதல் பரிசை வென்ற ஸ்ருத்திகாவிற்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி நடிகை ஸ்ருத்திகாவிற்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதுவரை நடைபெற்ற சீசன்களில் இந்த முறை தான் அதிகளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய சீசன்களில் ரூ.5 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் முதன்முறையாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ‘நடிப்பின் நாயகன்’ சூர்யாவுக்கு முதல் தேசிய விருது... எட்டுத்திக்கிலும் இருந்து குவிந்த வாழ்த்து மழை