விடுதலை படத்தை விட வாடிவாசலுக்கு கம்மி சம்பளம்... வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?
சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தை இயக்க உள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு விடுதலை படத்தை விட கம்மி சம்பளமே வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
vetrimaaran
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களைக் கொடுத்து வருபவர் வெற்றிமாறன். டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் அவருக்கு அதிகளவில் மவுசு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு, அதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் பிசியாகி உள்ளார் வெற்றிமாறன். இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்த பின்னர் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை வெற்றிமாறன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக விடுதலை 2 ரிலீஸ் ஆன பின்னர் தான் வாடிவாசல் ஷூட்டிங்கை தொடங்குவேன் என சொல்லிவிட்டாராம் வெற்றி.
இதையும் படியுங்கள்... திரிஷா டூ தமன்னா! கவர்ச்சியில் அதகளப்படுத்திய டாப் 10 தமிழ் ஹீரோயின்ஸ்
வெற்றிமாறனின் இந்த முடிவுக்கான காரணமும் தெரியவந்துள்ளது. விடுதலை படத்தை முதலில் ஒரே பாகமாக தான் வெளியிட திட்டமிட்டு ஷூட்டிங்கை தொடங்கினர். ஆனால் அப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததால் வெற்றிமாறனுக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் விடுதலை 2 படத்துக்கு பின் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்துக்காக அவருக்கு ரூ.15 கோடி தான் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.
விடுதலை படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாடிவாசல் படத்தில் கமிட் ஆகிவிட்டார் வெற்றிமாறன். இதனால் அந்த சமயத்தில் அவர் ரூ.15 கோடி சம்பளம் தான் ஒரு படத்துக்கு வாங்கி வந்ததால், அதே சம்பள தொகையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாராம். தற்போது விடுதலை ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், வெற்றிமாறனின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. தற்போது அவர் கால்ஷீட் கொடுத்தால் ரூ.50 கோடி வரை சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அப்படி இருக்கையில் வெறும் ரூ.15 கோடி சம்பளத்தில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளது வெற்றிமாறனுக்கே சற்று அப்செட் ஆக உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... பிரபுதேவாவின் தரமான டான்ஸ் உடன்... படமாகிறது ‘பேட்ட ராப்’ - ஹீரோயினாக நடிக்கப்போவது இவரா?