பிரபுதேவாவின் தரமான டான்ஸ் உடன்... படமாகிறது ‘பேட்ட ராப்’ - ஹீரோயினாக நடிக்கப்போவது இவரா?
டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த 'பேட்ட ராப்' திரைப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.
நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
வருகிற ஜூன் 15ந் தேதி முதல் புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'பேட்ட ராப்' உருவாக உள்ளது.
இதையும் படியுங்கள்... தடபுடலாக நடந்த ‘கலக்கப்போவது யாரு’ புகழ் தீனாவின் திருமணம்.... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
இதற்கேற்ற வகையில் "பாட்டு, அடி, ஆட்டம் - ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.
டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக 'பேட்ட ராப்' உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இதையும் படியுங்கள்... பாபா ராம்தேவ் மாதிரி இருப்பதாக கிண்டலடித்த நெட்டிசன்கள்.. சட்டென முடியை வெட்டி புது ஹேர்ஸ்டைலுக்கு மாறிய தனுஷ்