விக்ரம் உடன் ஹாட்ரிக் கூட்டணிக்கு தயாரான ஐஸ்வர்யா ராய்... இந்த முறையாவது ஜோடி சேர்வார்களா?
ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்த விக்ரம், ஐஸ்வர்யா ராய் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ளதாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தமிழில் அறிமுகம் செய்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர். மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், இதையடுத்து, அவர் இயக்கத்தில் குரு, இராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் ஐஸ்வர்யா ராய் நல்ல பெயரையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன.
அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் அதிகளவில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். இவர்கள் இருவரும் மணிரத்னம் இயக்கிய இராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் இணைந்து நடித்து இருந்தனர். இந்த இரண்டு படங்களிலும் இவர்களது காதலுக்கு சோகமான முடிவை கொடுத்திருப்பார் மணிரத்னம். இராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டு படங்களிலுமே ஐஸ்வர்யா ராயை உருகி உருகி காதலிக்கும் விக்ரம் கடைசியில் இறந்துவிடுவார்.
இதையும் படியுங்கள்... அஜித்தை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய விஜய்... தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா?
விக்ரமுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதால், அவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து வைக்கும் படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது. அது விரைவில் நடக்க இருப்பது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதன்படி விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்களாம்.
அவர்கள் இருவரையும் வைத்து புதிய கதைக்களத்துடன் மணிரத்னம் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். கமலின் படத்தை இயக்கி முடித்த பின்னர் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் இணையும் படத்தை இயக்க பிளான் போட்டுள்ளாராம் மணிரத்னம். இந்த படத்திலாவது அவர்கள் இணைவார்களா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மும்பையில் செட்டிலானதும் இந்தி பட வாய்ப்பை தட்டிதூக்கிய ஜோதிகா... 25 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட்டில் ஜோ எண்ட்ரி