- Home
- Cinema
- திரையரங்குகள் ஃபயர் விடப்போகும் எச்.ராஜா! மலையை மீட்க முறுக்கு மீசையுடன் களம் இறங்கிய H Raja
திரையரங்குகள் ஃபயர் விடப்போகும் எச்.ராஜா! மலையை மீட்க முறுக்கு மீசையுடன் களம் இறங்கிய H Raja
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கந்தன் மலை என்ற படத்தில் நடிகராக அவதாரம் எடுத்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.

நடிகராக அவதாரம் எடுத்த எச்.ராஜா
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான எச்.ராஜா அரசியலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர். அப்படிப்பட்ட எச்.ராஜா தற்போது சினிமா துறையில் கால் பதித்துள்ளார். தமிழகத்தில் சினிமா, அரசியல் இடையேயான உறவு மிகவும் பழமையானது தான். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களை அதிகம் பார்த்துள்ளோம். ஆனால், அரசியலில் இருந்து சினிமாவுக்கு செல்லும் தலைவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் எச்.ராஜாவின் புதிய அவதாரம் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
படத்தின் கதை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை யார் உரிமை கொண்டாடுவது என்பதில் அண்மையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மதத்தினர் இடையே மோதல் வெடித்தது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நவாஸ் கனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், இந்து மதத்தினருக்கு ஆதரவாக எச்.ராஜா உள்ளிட்ட பாஜக பிரமுகர்களும் மலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் தொற்றிக் கொண்டது. மேலும் திருப்பரங்குன்றம் மலையின் பெயர் சிக்கந்தர் மலை கிடைகயாது, அதன் பெயர் கந்தர் மலை என்று பேசியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எச்.ராஜா கந்தன் மலை என்ற படித்தில் நடித்துள்ளதால் இந்த படம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட நயினார்
இந்நிலையில், எச்.ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கிடுகு திரைப்பட இயக்குனர் சகோதரர் திரு.வீரமுருகன் அவர்கள் இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் , தமிழக முன்னாள் அமைச்சர் திரு.தளவாய் சுந்தரம், அண்ணாச்சி திரு.M.R. காந்தி MLA, மாநில பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் திரு.ராம.சீனிவாசன், திரு.பொன் V.பாலகணபதி, மாநில துணைத் தலைவர் திரு.கோபால்சாமி Ex. MLA, தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு.நீலமுரளி யாதவ் மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்” என்று குறிப்பிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.