- Home
- Tamil Nadu News
- ஒருவித மனநல பாதிப்பால் திருமா இப்படி பேசுகிறார்! திமுக கூட்டணியில் இருந்து வெளியே வாங்க! எச்.ராஜா!
ஒருவித மனநல பாதிப்பால் திருமா இப்படி பேசுகிறார்! திமுக கூட்டணியில் இருந்து வெளியே வாங்க! எச்.ராஜா!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். திராவிட சித்தாந்தமே இதற்குக் காரணம் என்றும், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: எல்லா விதங்களிலும் தோற்றுப் போன அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தமிழக சட்டம் - ஒழுங்கு இல்லை. ஏற்கெனவே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் 5 காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். நியாயம், தர்மத்தை பற்றி கவலைப்படாமல் உண்மையை எப்படியாவது மறைப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. அஜித் குமார் விஷயத்தில் அந்த வீடியோ எடுக்கப்படவில்லை என்றால் இன்றைக்கு இந்த கொலை வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். அவர் வீட்டுக்கு முதலில் போன அரசியல்வாதி என்ற முறையில் சிபிஐ விசாரணை கேட்ட பிறகு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அப்படி என்றால் ஆணவக் கொலை ஏன் நடந்தது என திமுகவுக்கு எச்.ராஜா கேள்வி எழுப்பினார். திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் சாதி வன்மத்தை, சாதி உணர்வுகளை உங்களால் அழிக்க முடியவில்லை. திராவிட சித்தாந்தம் தமிழகத்துக்கு வந்த பிறகுதான் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. இது தமிழ்நாட்டிற்கு அவமானம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தின் அழிவு சக்தி என்பதற்கு ஆணவ கொலைகள் பெரிய எடுத்துக்காட்டு. உள்ளபடியே உங்க கொள்கை எல்லாம் உணர்வுபூர்வமாக இருந்தால் முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என்ன சாதித்து இருக்கிறீர்கள்? என்ன ஆட்சி இது.
ஆணவப் படுகொலை தொடர்பாக தேசிய அளவில் மத்திய அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருவித மனோவியாதி பாதிப்பால் அவர் இப்படி பேசுகிறார். திருமாவளவன் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். திராவிட சித்தாந்தத்தில் இருந்து தான் ஆணவக்கொலை நடைபெறுகின்றன.
ஆணவப் படுகொலை தொடர்பாக தேசிய அளவில் மத்திய அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருவித மனோவியாதி பாதிப்பால் அவர் இப்படி பேசுகிறார். திருமாவளவன் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். திராவிட சித்தாந்தத்தில் இருந்து தான் ஆணவக்கொலை நடைபெறுகின்றன.