- Home
- Cinema
- பாக்ஸ் ஆபிஸில் அப்பாவுக்கே தண்ணிகாட்டிய துருவ் விக்ரம்... சீயான் பட சாதனைகளை சல்லி சல்லியாக நொறுக்கிய பைசன்..!
பாக்ஸ் ஆபிஸில் அப்பாவுக்கே தண்ணிகாட்டிய துருவ் விக்ரம்... சீயான் பட சாதனைகளை சல்லி சல்லியாக நொறுக்கிய பைசன்..!
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் பைசன் காளமாடன் திரைப்படம், சீயான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.

Bison Kaalamaadan Box Office Collection
வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த 'பைசன் காளமாடன்'. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ஜானரில் உருவான இப்படம், தீபாவளி வெளியீடாக இந்த மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. தற்போது, இப்படத்தின் சமீபத்திய உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு டிராக்கர்களின் கணிப்புகளுக்குப் பிறகு, தயாரிப்பாளர்களே படத்தின் வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.
பைசன் வசூல்
தயாரிப்பாளர்களின் கணக்குப்படி, உலக பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 நாட்களில் இப்படம் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் இந்திய வசூல் மட்டும் அதிகமாக உள்ளது. சினிட்ராக் கணக்குப்படி, படத்தின் இந்திய வசூல் 27.9 கோடி. தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், அங்கு இருந்து மட்டும் 50 கோடியை கடக்கும் என சினிட்ராக் கணித்துள்ளது. படத்தின் மொத்த வசூலில் பெரும்பகுதி தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது. சினிட்ராக் தகவல்படி தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இதுவரை 25.75 கோடியும், கர்நாடகாவில் இருந்து 1.2 கோடியும், கேரளாவில் இருந்து 65 லட்சமும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து 30 லட்சமும் வசூலாகியுள்ளது. வெளிநாடுகளில் 7.1 கோடி வசூல் செய்துள்ளது.
பைசன் டீம்
மாரி செல்வராஜே இப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். துருவ் விக்ரமுடன் பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், ஹரிதா முத்தரசன், கே. பிரபஞ்சன், அருவி மதன், அனுராக் அரோரா, புளியங்குளம் கண்ணன், சுபத்ரா ராபர்ட், விஸ்வதேவ் ரசகொண்டா, லெனின் பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் பேனர்களின் கீழ் சமீர் நாயர், தீபக் சைகல், பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஏழில் அரசு கே ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். துருவ் விக்ரமின் திரைப்பயணத்தில் இது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
விக்ரம் பட வசூலை முந்திய துருவ்
பைசன் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய தந்தையின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையே முறியடித்து உள்ளார் துருவ் விக்ரம். விக்ரம் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் வீர தீர சூரன். இப்படம் வெளியான 5 நாட்களில் இந்திய அளவில் வெறும் 23 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் திரைப்படம் ரிலீஸ் ஆன ஐந்து நாட்களில் ரூ.27 கோடிக்கு மேல் இந்தியாவில் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் தன் தந்தைக்கே டஃப் கொடுத்திருக்கிறார் துருவ். இப்படம் இந்த வாரம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளதால், பைசன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.