பலர் உதவியால் பெற்றோருக்கு சொந்த வீடு கட்டி கொடுத்துள்ள பிக்பாஸ் தாமரை! அட சூப்பரா இருக்கே.. புகைப்பட தொகுப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, தாமரை பல ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் உதவியுடன் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இந்த வீட்டை அவர் சுற்றி காட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சரி வாங்க அவங்க கட்டி இருக்கும் வீடு எப்படி இருக்கிறது என்பதை நாமும் இந்த புகைப்படங்கள் மூலம் பார்க்கலாம்...
வீடு என்பது அனைவருடைய வாழ்விலும் ஒரு அங்கமாக இருப்பது, சிறு வயதில் இருந்தே கஷ்டத்தை அனுபவித்த கிராமத்து மக்கள் பலர், இன்னும் மழை ஒழுகும் வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.
அப்படி தான், தெரு கூத்து கலைஞரான தாமரை செல்வி, மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் அதிர்ஷ்டம் திடீர் என, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல்! கவிதையால் உருகிய ரவீந்தர்.. வைரலாகும் பதிவு!
ஆரம்பத்தில், எதுவும் தெரியாத வெள்ளந்தியாக பிக்பாஸ் விளையாட்டை விளையாட துவங்கிய தாமரை, முதல் வாரத்திலேயே தலைவராக மாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இரண்டு வாரம் இவர் உள்ளே தாக்கு பிடிப்பதும் மிகவும் கஷ்டம் என பலர் நினைத்த நிலையில்... வெற்றிகரமாக 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து நின்று விளையாடி அசரவைத்தார்.
அதே போல், தன்னுடைய மகனுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக, பல முறை தாய் பாசத்தை முன்னிறுத்தி விளையாடிய தாமரை... தன்னுடைய மகனுடன் சேர்ந்து மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
மேலும், தற்போது சில சீரியல்கள் மற்றும் பட வாய்ப்புகளையும் கை பற்றியுள்ள பிக்பாஸ் தாமரை, பெற்றோர் பற்றிய தகவலும்... அவர்கள் வாழ்வதற்கு நல்ல வீடு கூட இல்லாமல் அவதி பட்டு வரும் தகவலும் சில மாதங்களுக்கு முன் பரவியது.
இதை தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்... தாமரையின் பெற்றோருக்கு வீடு காட்டிக்கொடுக்க உள்ளதாகவும், அவர்களுக்கு உதவும் மனம் படைத்தார்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதை தொடர்ந்து பலர் தற்போது உதவ முன் வந்து... தாமரை அவரின் பெற்றோருக்கு ரசிகர்கள் கட்டி கொடுக்க உள்ள வீடு கிட்ட தட்ட 80 சதவீத வேலைகள் முடிவடைந்து விட்டது. மீதம் உள்ள வேலைகளும் விரைவில் முடிவடைந்து விடும் என தெரிவித்துள்ளனர்.
விரைவில் திருமணம்... அமீருடன் காதலர் தினத்தை ரொமான்டிக்காக கொண்டாடி அதகளம் செய்யும் பாவனி! போட்டோஸ்!
ஒரு ஹால், ஒரு ரூம், பூஜை அரை மற்றும் காற்றோட்டமாக ஜன்னல்... என ஒரு மெத்தை வீடாக எளிமையாக கட்டப்பட்டுள்ளது வீடு. வீட்டை சுற்றி, சுண்டைக்காய், தேங்காய், அரணாசி பழம், ஆடுகள் என கிராமத்து வாழ்க்கையை கண் முன் காட்டியுள்ளார்.
விரைவில், இந்த வீட்டின் பணிகள் முடிந்து விடும் என்றும்... அனைவரும் பால் காய்ச்ச வரவேண்டும் என அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமே அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது