Biggboss Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேற போவது இவரா..?
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை துவங்கிய நிலையில், இந்த வாரம் ஒருவேளை எலிமினேஷன் இருந்தால் இவர்தான் வெளியேறுவார் என இப்போதே கணித்து கூற துவங்கிவிட்டனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசனை விட, இந்த முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக வந்த முதல் நாளே டாஸ்க் வைத்து நான்கு பேரை வீட்டிற்கு வெளியே அனுப்பினார் பிக்பாஸ். அவர்கள் நான்கு பேரும் இந்த முறை நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் ஒவ்வொருவருக்கும் தனி தனி லக்சுரி பாயிண்ட்ஸ் , வீடு சுத்தம் செய்பவர்கள், பாத்திரம் சுத்தம் செய்பவர்கள், பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள், சமைப்பவர்கள் என அனைவரும் ஒவ்வொரு கிளப்பாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் உள்ள தலைவரை தேர்வு செய்ய கூட, தனி டாஸ்க் வைக்கப்பட்டது, பிக்பாஸ் 6 நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்டியது.
மேலும் செய்திகள்: விஜய் உற்பட நான்கு முன்னணி நடிகர்களின் படத்தை தயாரிக்கிறார் தோனி? தீயாய் பரவும் தகவல்!
இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்தவாரம் துவங்கும் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என தெரிகிறது .
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினமே... சில போட்டி பொறாமைகள்... சண்டைகள் சூடு பிடிப்பது புரோமோ மூலம் தெரியவந்தது. இதில் ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என கூறி ஜிபி முத்து ஆர்மியினரிடம் வசமாக சிக்கியுள்ளார் தனலட்சுமி.
மேலும் செய்திகள்: படுக்கையறை காட்சியில் கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ்வர்யா தத்தா... 'மிளிர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
எனவே இந்த வாரம் எலிமினேஷன் இல்ல விட்டாலும், அடுத்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால்... இவரை தான் முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புவோம் என கூறி வருகின்றனர் ஜி.பி.முத்து ஆதரவாளர்கள்.
டிக் டாக் செயலியில் கண்ட மேனிக்கு வீடியோ வெளியிட்டு, நெகடிவ் விமர்சனங்கள் மூலம் ஜிபி முத்து பிரபலமாகி இருந்தாலும், இவர் வெள்ளந்தியாக பேசுவது... நடந்து கொள்வது இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பிக்பாஸ் மூலம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: E.V.Rajan Passaway: எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தயாரித்த இ.வி. ராஜன் காலமானார்!
மேலும் பிக்பாஸ் வீட்டில், மகேஸ்வரியிடம் சாப்பாட்டுக்காக பிரச்சனை செய்து சிக்கிய தனலட்சுமி தற்போது ஜிபி முத்து விஷயத்திலும் சிக்கி உள்ளார். கடந்த சீசனில் கூட போட்டியாளர்கள் கணித்தது போலவே ஒவ்வொரு பிரபலங்கள் வெளியான நிலையில், இந்த முறையும் அப்படியே நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.