விஜய் உற்பட நான்கு முன்னணி நடிகர்களின் படத்தை தயாரிக்கிறார் தோனி? தீயாய் பரவும் தகவல்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நடிகர் விஜய் உற்பட நான்கு மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து, படம் தயாரிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது நாம் அறிந்ததே. விளையாட்டை தாண்டி பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். மேலும் பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தோனி தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நான்கு நடிகர்களை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக விஜயின் 70ஆவது படத்தை தோனி தயாரிக்க உள்ளாராம். ஆனால் இது குறித்து தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: சாய் பல்லவிக்கு அடித்த அதிஷ்டம்... ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்கு பிலிம் ஃபேர் விருது! வைரலாகும் புகைப்படம்
இது குறித்து வெளியாகி உள்ள தகவலின் படி, தோனிக்கு 7 மிகவும் ராசியான எண் என்பதால், விஜய்யின் 70 வது படத்தை அவர் தயாரிக்க உள்ளதாகவும், இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்தும், மலையாளத்து பிரித்விராஜை வைத்தும், கன்னடத்தில் கிச்சா சதீப்பை வைத்தும் படம் தயாரிக்க உள்ளாராம். ஏற்கனவே நயன்தாரா நடிக்க உள்ள படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியான போது, இதற்க்கு அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்த நிறுவனம், கூடிய விரைவில் இந்த தகவல் குறித்தும் உண்மையான தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதர் ஆக இருந்துள்ளார், 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பின் போது கூட, விஜய் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் சந்தித்துக் கொண்டனர். எனவே விஜய்யை வைத்து தோனி படம் தயாரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் நெட்டிசன்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: E.V.Rajan Passaway: எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தயாரித்த இ.வி. ராஜன் காலமானார்!