E.V.Rajan Passaway: எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தயாரித்த இ.வி. ராஜன் காலமானார்!
தமிழ் சினிமாவில் காலங்களால் அழியாத படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் இ.வி.ராஜன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
வசூலில் அடித்து நொறுக்கும் வகையில் சிறந்த தமிழ் படங்கள் தற்போது வந்து கொண்டிருந்தாலும், அந்த காலத்திலேயே... பெரிதாக எந்த ஒரு டெக்னலாஜியும் இல்லாமல் சிறப்பான காட்சிகளை வெளிப்படுத்திய அந்த காலத்து திரைப்படங்கள் பல உள்ளன. அது போன்ற படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த தயாரிப்பாளர்களில் ஒருவர், இ.வி. ராஜன்.
இவர் எம்.ஜி.ஆர். நடித்த வெளியான" குமரிப் பெண்" , சிவாஜி நடித்த " தங்கச்சுரங்கம்" , ரஜினி நடித்த " குப்பத்து ராஜா" அர்ஜூன் நடித்த " கல்யாண கச்சேரி" மற்றும் " சட்டம் சிரிக்கிறது" உள்ளிட்ட சுமார் 15 படங்களை தன்னுடைய இ.வி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர்.
மேலும் செய்திகள்: சாய் பல்லவிக்கு அடித்த அதிஷ்டம்... ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்கு பிலிம் ஃபேர் விருது! வைரலாகும் புகைப்படம்
83 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இவர் பிரபல திரை நட்சத்திரம் ஈ.வி.சரோஜாவின் சகோதரராவார். பிரபல இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மைத்துனராவார். இவரது இறுதி சடங்கு நாளை மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் தற்போது இவருடைய உடல் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.