படுக்கையறை காட்சியில் கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ்வர்யா தத்தா... 'மிளிர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், உருவாகியுள்ள ரொமான்டிக் ஆக்ஷன் திரில்லர் படமான 'மிளிர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர்.
இப்படத்தில் "பிக்பாஸ்" புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார்.
மேலும் செய்திகள்: Mili Teaser உயிர் பிழைக்க குளிரில் போராடும் ஜான்வி கபூர்... வெளியானது 'மிலி' டீசர்..!
இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார்.
கதாநாயகியை மையப்படுத்திய இந்த திருப்பிடம் ரொமான்டிக், ஆக்ஷன், த்ரில்லர் கலந்த படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடந்து முடிந்தது.
மேலும் செய்திகள்: E.V.Rajan Passaway: எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தயாரித்த இ.வி. ராஜன் காலமானார்!
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தா கதாநாயகனுடன் மிகவும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் மிகவும் அழுக்கான உடைகளுடனுன், ரொமான்டிக் போர்ஷனிலும் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.
மேலும் செய்திகள்: சாய் பல்லவிக்கு அடித்த அதிஷ்டம்... ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்கு பிலிம் ஃபேர் விருது! வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குனர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் சென் ஆகியோர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.