பலே பிளான்.. பெரிய தொகையை அபேஸ் செய்த பிக்பாஸ் அபிநய் மனைவி! தீவிரமாக தேடும் போலீஸ்.. 6 பிரிவில் வழக்கு பதிவு!
பிக்பாஸ் பிரபலமும், ஜெமினி கணேசனின் பேரனுமான... அபிநய் மனைவி, அபர்ணா மோசடி வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக, அபிநய்யின் மனைவி, அபர்ணா மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில், தலைமறைவாக இருக்கும் அவரை, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாம்பலம் பகுதி ஆற்காட்டை சேர்ந்தவர், மஞ்சு. ஆடை வடிவமைப்பாளரான இவர்... சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பது மட்டும் இன்றி, அபிநய்யின் மனைவி... அபர்ணா நடத்தி வரும் ஜவுளி நிறுவனத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் மஞ்சுவின் மகள், கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில், நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் அவர் விருப்பப்படும் கல்லூரியில் மருத்துவம் படிக்க முடியவில்லை என, மிகவும்... கவலை படுவதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அபர்ணா, மஞ்சு மகள் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மருத்துவ கல்லூரியில் தனக்கு தெரிந்தவர்கள் உள்ளதாகவும், எனவே... அங்கு சீட் வாங்கி தர 20 லட்சம் பேரம் பேசியதாக தெரிகிறது.
இதற்க்கு முன் பணமாக 5 லட்சம் பணத்தை, அபர்ணாவின் நண்பர் அஜய் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மீதம் பணத்தை... கல்லூரி சேர்ந்த பிறகு தருவதாகவும் கூறி இருந்தார். மேலும் அபர்ணா 5 லட்சம் கொடுத்த பின்னர், ஒரு சில நாட்களில்... ரசீது ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ரசீதை எடுத்து கொண்டு மகளை கல்லூரியில் சேர்க்க, மஞ்சு சென்றபோது அது போலியானது என தெரிய வந்துள்ளது.
லோ நெக் ஜாக்கெட்டில்... இன்ஸ்டாகிராமை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்! தாறுமாறு லுக்கில் செம்ம ஹாட் போஸ்!
இதை தொடர்ந்து, இது குறித்து அபர்ணாவிடம் மஞ்சு சென்று கேட்டபோது... தன்னுடைய நண்பரின் வங்கி கணக்குக்கு தானே அனுப்பினீர்கள் அவரிடமே கேளுங்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து இவர்கள் இருவராலும் அலைக்கழிக்கப்பட்ட, மஞ்சு இது குறித்து... மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மற்றும் அஜய் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
மேலும் அபர்ணா தற்போது தன்னுடைய, கடையை மூடி விட்டு தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் அவர் மீது போலியான ஆவணம் உருவாக்குதல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெமினியின் பேரனுக்கு இப்படி ஒரு நிலையா? என பலர் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.