லோ நெக் ஜாக்கெட்டில்... இன்ஸ்டாகிராமை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்! தாறுமாறு லுக்கில் செம்ம ஹாட் போஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது... பாவாடை ஜாக்கெட்டுடன் கவர்ச்சி குதூகலம் செய்த ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் நானிக்கு ஜோடியாக, நடித்துள்ள... பான் இந்தியா படமான 'தசரா' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்த படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். மார்ச் 30 ஆம் தேதி இப்படம் மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது. நானி ஷியாம் சிங்க ராய் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இதுவரை மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகம் நடித்துள்ள நானி முதல் முறையாக தரலோக்கலாக இறங்கி நடித்துள்ளார்.
இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, கன்னட நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர், டீசர், சிங்கிள் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ள நிலையில், படத்தின் புரோமோஷனின் போது கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்டுள்ள செம்ம ஹாட் போட்டோஸ், சிலவற்றை கீர்த்தி வெளியிட அது அதிக அளவில் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
பிரவுன் கலர் டீப் நெக் ஜாக்கெட் அணிந்து... லெஹன்கா டைப் உடையில் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.