இரண்டாவது மனைவியுடன் விவாகரத்தா? அந்த ட்வீட்டின் பின்னணி இதுதான்! பதறியபடி விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்!
சமீபத்தில் நடிகர் நடிகர் விஷ்ணு விஷால், போட்ட பதிவு இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்ய உள்ளாரா? என்கிற குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதற்க்கு தன்னிலை விளக்கம் கொடுத்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவிலில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து மிகவும் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் ஹீரோவாக அறிமுகமானவெண்ணிலா கபடிக் குழு படம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான இரு விருதுகளை பெற்று கொடுத்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடித்த, குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்ற படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் என்பதை தாண்டி, ஒரு தயாரிப்பாளராகவும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இயக்கி வரும், 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, இந்த மாதம் (மார்ச் 7) திருவண்ணாமலையில் துவங்கிய நிலையில், மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஷ்ணு விஷால் போட்ட பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது. 'பரவாயில்லை, மீண்டும் முயற்சித்தேன். நான் மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என்னுடைய தவறு எதுவும் இல்லை... அது துரோகம் மற்றும் ஏமாற்றம்” என பதிவிட்டு வாழ்க்கை பாடம் என கேப்ஷனும் கொடுத்திருந்தார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், விஷ்ணு விஷால் அவரின் இரண்டாவது மனைவியான ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்யப்போகிறாரா? என கேள்வி எழுப்பி வந்தனர்.
இப்படி ஒரு பதிவு போட்டதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். தற்போது போட்டுள்ள பதிவில் "ஹாய் எல்லோருக்கும் ... சில நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இது தொழில் ரீதியாக இருந்தது. மற்றும் தனிப்பட்டது அல்ல. ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு நம்பிக்கை. நாம் தோல்வியடையும் போது நம்மை நாமே குற்றம் சாட்டுகிறோம். நாமே கடினமாக இருக்கிறோம். நான் சொன்னது அவ்வளவுதான். ஆல் இஸ் வெல் என பதிவிட்டுள்ளார்.
14 வயத்தில் மகள்... திருமணம் ஆகி 17 வருடத்திற்கு பின் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான நடிகர் 'பக்ரு'!
இந்நிலையில் இப்படி ஒரு பதிவு போட்டதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். தற்போது போட்டுள்ள பதிவில் "ஹாய் எல்லோருக்கும் ... சில நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இது தொழில் ரீதியாக இருந்தது. மற்றும் தனிப்பட்டது அல்ல. ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு நம்பிக்கை. நாம் தோல்வியடையும் போது நம்மை நாமே குற்றம் சாட்டுகிறோம். நாமே கடினமாக இருக்கிறோம். நான் சொன்னது அவ்வளவுதான். ஆல் இஸ் வெல் என பதிவிட்டுள்ளார்.