பிக் பாஸ் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யார் யாருக்கு இருக்கு தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில் இதில் கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யார் யாருக்கு இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் பட்டியல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்னதாக 8ஆவது சீசனை தொகுத்து வழங்கிய நிலையில், இப்போது பிக் பாஸ் தமிழ் 9ஆவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல்
இந்த நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர், எஃப் ஜே அதிசயம், விஜே பார்வதி, துஷார், அப்சரா சிஜே, விஜே நந்தினி, பிரவீன் தேவசகாயம், பிரவீன் காந்தி, விக்கல்ஸ் விக்ரம், கனி திரு, கானா வினோத், வியானா, அகோரி கலையரசன், சபரி, கம்ரூதீன், கெமி, ரம்யா ஜோ, ஆதிரை, சுபிக்ஷா என்று மொத்தமாக 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நேரடியாக வெளியாகும் “ராம்போ”!
பிக் பாஸ் சீசன் 9
இவர்களில் சபரி, பிரவீன் ராஜ் தேவசகாயம், கெமி, ஆதிரை சௌந்தரராஜன், கம்ரூதீன் ஆகியோர் விஜய் டிவி பிரபலங்கள். விஜே பார்வதி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று அனைவரும் அறிந்தவர். இவர்கள் தவிர விக்கல்ஸ் விக்ரம் நன்கு பரீட்சையமானவர். இவர்கள் தவிர திவாகர், துஷார், அரோரா, எஃப் ஜே, கானா வினோத், வியானா, அகோரி கலையரசன், ரம்யா ஜோ, சுபிக்ஷா ஆகியோர் அந்தளவிற்கு பிரபலம் இல்லை. இருந்த போதிலும் அவரவர் துறைகளில் இவர்கள் அனைவரும் பிரபலம். உதாரணத்திற்கு கானா வினோத் சினிமா துறையில் பாடலாசிரியராகவும், சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்கிறார்.
ஒரு நாளைக்கு 10 கோடியா?... பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் யார் தெரியுமா?
விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ்
ரம்யா ஜோ சிறந்த டான்ஸரும் கூட. பல திருவிழாக்களில் இவரை மேடை நிகழ்ச்சிகளில் டான்ஸராக பார்த்திருக்கலாம். அகோரி கலையரசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி இப்போது திருந்து வந்திருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். எஃப் ஜே ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், ஜிபி முத்து போன்று சமீபகாலமாக பிரபலமாகி வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த 20 போட்டியாளர்களில் இறுதி நாட்கள் அதாவது 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து டைட்டில் வெல்லும் வாய்ப்பு எந்த போட்டியாளருக்கு இருக்கிறது என்று பார்த்தால் துஷார், கம்ரூதீன், பிரவீன் ராஜ் தேவசகாயம், சுபிக்ஷா, கெமி, ஆதிரை, சபரி ஆகியோரை குறிப்பிடலாம். இவர்களுக்கு இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி முழுவதுமாக 24 மணி நேரம் ஆவதற்கு முன்னதாகவே இறுதிப் போட்டி வரை செல்லும் போட்டியாளர்கள் கணிக்கப்பட்டுள்ளனர். இனி இவர்கள் விளையாடும் திறமையை பொறுத்தி பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு செல்வார்களா இல்லையா என்பது பற்றி தெரிய வரும்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 எலிமினேஷன்
இது தவிர முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர்கள் என்று பார்த்தால் பிரவீன் காந்தி, கானா வினோத், அகோரி கலையரசன், திவாகர், வியானா, அப்சரா சிஜே ஆகியோரை குறிப்பிடலாம். பிக் பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷனுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் அதுவரையில் யார் யார் எப்படி எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.