- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சண்டை போட்டு வீட்டை விட்டு வந்த செந்தில் – ஒரு வழியாக புதிய வீட்டுல பால் காய்ச்சிய மீனா: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சண்டை போட்டு வீட்டை விட்டு வந்த செந்தில் – ஒரு வழியாக புதிய வீட்டுல பால் காய்ச்சிய மீனா: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Senthil and Meena New House Warming Function in Pandian Stores 2 This Week Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஆரம்பத்தில் கதிர் தான் அப்பாவை எதிர்த்து எதிர்த்து பேசிக் கொண்டிருப்பார். ஆனால், இப்போது அப்பாவிற்கு பிடித்த பிள்ளையாக கதிர் இருக்கும் போது அவருக்கு பிடிக்காத பிள்ளையாக அரசு வேலை பார்க்கும் செந்தில் இருந்து வருகிறார். பாண்டியன் குடும்பத்தில் மீனா மற்றும் செந்தில் மட்டும் தான் அரசு வேலை பார்க்கிறார்கள். இதில், மீனாவிற்கு அரசு விடுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர் ஏற்றுக் கொள்ளவா வேண்டாமா என்பது பற்றி தனது கணவரிடம் கேட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை - முதல் நாளே வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பால் காய்ச்சுதல்
அவரும் இதுதான் சந்தர்ப்பம் என்று சொல்லி அரசி விடுதியை வாங்கிக் கொள்ள நாம் தனிக்குடித்தனம் சென்றுவிடலாம் என்று மீனாவை கட்டாயப்படுத்தியுள்ளார். மீனாவிற்கு விருப்பம் இல்லாத போதிலும் அவரது அப்பா, அம்மாவை தூது அனுப்பினார். அதிலேயும் மீனா கேட்கவில்லை. பின்னர் கதிர் மூலமாக தெரியப்படுத்தினார். அதிலேயும் மீனா ஒத்துக் கொள்ளவில்லை. வேறு வழியே இல்லாத செந்தில் தனது அம்மா, அப்பாவிடம் இதைப் பற்றி சொல்லிவிட்டார்.
கோமதிக்கு கோபம்
இதன் காரணமாக குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தது. இதில் கோமதிக்கு தான் அளவுகடந்த கோபம் ஏற்பட்டது. ஆனால், பாண்டியன் தனது கோபத்தையும், ஆத்திரத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். மேலும், சரவணன், பழனிவேல் என்று எல்லோரும் சொல்லிப் பார்த்தார்கள், ஆனால், செந்தில் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் நாளைக்கு வீடு பால்காய்ச்ச வேண்டும். ஐயர் நல்ல நாள் என்று குறித்து கொடுத்திருக்கிறார் என்று சொல்லி குடும்பத்தினர் அனைவரையும் அரசு விடுதிக்கு அழைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார எபிசோடு
இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டது. அதன்படி இந்த புரோமோ வீடியோவில் அரசு விடுதியில் செந்தில் மற்றும் மீனா இருவரும் பால் காய்ச்சுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதில் செந்திலின் அம்மா உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில் பாண்டியன் மட்டும் வராமல் இருந்தார்.
பால் காய்ச்சுக்கு வந்த பாண்டியன்
கடைசியில் அவரும் வரவே, கோமதி பால் காய்ச்சினார். பின்னர் செந்தில் மற்றும் மீனா இருவரும் பாண்டியனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அதோடு, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அந்த புரோமோ வீடியோ முடிந்தது. இந்த வாரம் இந்த புரோமோ வீடியோவில் உள்ள காட்சிகள் தான் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் கடைக்கு புதிதாக வந்துள்ள தங்கமயில் மற்றும் அவரது அப்பா மாணிக்கம் ஆகியோரது ரோதனைகள் தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இடையிடையில் இந்த காட்சியும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிகிறது.