MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லீக் ஆனது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் சம்பள பட்டியல்! இந்த 2 பேருக்கு தான் ஜாக்பாட்!

லீக் ஆனது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் சம்பள பட்டியல்! இந்த 2 பேருக்கு தான் ஜாக்பாட்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில், இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது லீக் ஆகியுள்ளது.  

3 Min read
Author : manimegalai a
Published : Oct 10 2024, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

விதவிதமான கான்செப்டில், எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் யூடியூப் வைத்திருப்பவர்கள்... தினமும் பிக்பாஸ் பற்றி ஏதாவது தினுசு தினுசாக வீடியோ போட்டே கல்லாக்கட்டி விடுவார்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Kamalhaasan and Vijay sethupathi

Kamalhaasan and Vijay sethupathi

2017-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டதில் இருந்து, தொடர்ந்து  இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த உலகநாயகன் கமலஹாசன், தன்னுடைய திரைப்படப் பணி காரணமாகவும்.. ஏஐ டெக்னாலஜி குறித்து, அமெரிக்கா சென்று படிக்க உள்ளதாலும் அதிரடியாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என அறிவித்தார். இதை தொடர்ந்து கமலஹாசன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான மூன்று நாட்களில், விஜய் டிவி தரப்பில் இருந்தும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. எனவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால், அடுத்த தொகுப்பாளர் யாராக இருக்கும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின.

நம்ரதாவுக்காக சூப்பர் ஸ்டார் மகளை நிராகரித்த மகேஷ் பாபு!
 

37
Bigg boss Tamil season 8 contestant

Bigg boss Tamil season 8 contestant

பல நடிகர் - நடிகைகளின் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்ட நிலையில், இறுதியாக  நடிகர் விஜய் சேதுபதி கமல்ஹாசனின் இடத்தை நிரப்ப உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய போது, கமல்ஹாசனின் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா? என பல ரசிகர்கள் தொடர்ந்து சந்தேக கேள்விகளை முன் வைத்து வந்த நிலையில், இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 106 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான நம்பிக்கையை அறிமுக நாளிலேயே ரசிகர்கள் மனதில் விதைத்தார் விஜய் சேதுபதி.
 

47
Vijay Sethupathi Anchoring

Vijay Sethupathi Anchoring

குறிப்பாக இவர் தன்னுடைய பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கியது ஹை லைட்டாக பார்க்கப்பட்டது. அதே போல் ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் மற்றும் பீஷ்மர் திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி பேசியது கருத்து கவனிக்கப்பட்டது. அருண் பிரசாத் கலைக்காக நடிக்க வருபவர்கள் காசை எதிர்பார்க்க மாட்டார்கள் என கூறிய போது, நான் காசுக்காக தான் நடிக்க வந்தேன் என விஜய் சேதுபதி கூறியது அல்டிமேட் பதிலாக இருந்தது. அதேபோல் அர்னவ் நான் ஒரு ஆம்பளை என கூறியபோது இப்ப போய் என்ன ஆம்பள? பொம்பள? என நடுநிலையாக அவர் பேசியது ஒரு சிறந்த தொகுப்பாளராகவே அவரை ரசிகர்கள் மத்தியில் பார்க்க வைத்தது.

டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!
 

57
Bigg Boss Tamil 8 Contestant Salary

Bigg Boss Tamil 8 Contestant Salary

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உலக நாயகன், கடைசியாக 130 கோடி சம்பளமாக பெற்ற நிலையில்... விஜய் சேதுபதிக்கு மொத்தம் 15 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகின்றனர்? என்கிற தகவல் லீக் ஆகியுள்ளது.

பிலிமி பீட் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கானா பாடகர் ஜெஃப்ரி, 'வேற மாறி ஆபீஸ்' புகழ் சௌந்தர்யா நஞ்சுட்டன், ஆர் ஜே ஆனந்தி, மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் தான் இந்த சீசனில்  மிகவும் குறைவாக சம்பளம் பெறும் பிரபலங்கள் என்றும், இவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெருகிறார்களாம்.

67
Serial Actor Salary

Serial Actor Salary

இவர்களுக்கு அடுத்தபடியாக, சீரியல் பிரபலங்களான அருண் பிரசாத், தர்ஷிகா, அக்ஷிதா, விஜே விஷால், சத்யா மற்றும் சுனிதா போன்ற நடிகர்கள் சீரியலில் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகிறார்களோ அதே சம்பளம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.

டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!
 

77
Bigg Boss High Paid Salary Persons

Bigg Boss High Paid Salary Persons

இதைத் தொடர்ந்து தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகையும் குக் வித் கோமாளி தர்ஷாகுப்தா ஆகியோர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.  இவர்களை தொடர்ந்து தொகுப்பாளர் தீபக் மற்றும் 24 மணி நேரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய, மகாராஜா பட நடிகை சாச்சனா ஆகியோர் 30,000 சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் அனைவரை விட... பெரும் தொகையை பிக்பாஸ் வீட்டில் சம்பளமாக வாங்கி வருவது ரவீந்தர் மற்றும் ரஞ்சித் தான். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு மட்டுமே சுமார் 50-ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஒருவேளை இவர்கள் 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து விளையாடினால்... 50 லட்சம் ரொக்க பரிசை விட இவர்கள் வாங்கும் சம்பளம் தான் இவர்களுக்கு ஜாக்பாட்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
கமல்ஹாசன்
விஜய் சேதுபதி
விஜய் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved